For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் வரலாற்றிலேயே பிரம்மாண்ட தொடக்க விழா.. எப்படி நேரலையில் பார்ப்பது? முழு விவரம்

டெல்லி: பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் பிரம்மாண்ட தொடக்க விழா ஜூலை 26, வெள்ளியன்று செய்ன் ஆற்றில் நடைபெற உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வில் இந்தியா பங்கேற்கிறது. இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தேசிய கொடியை ஏந்திச் செல்வார். ஆனால், இந்த முறை இந்திய வீரர்கள் கொடியை ஏந்திக் கொண்டு நடக்க மாட்டார்கள். மாறாக அனைவரும் ஒரு படகில் தான் இருப்பார்கள்.

எப்போதும் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானத்திற்குள் தான் நடைபெறும். ஆனால், இந்த முறை பாரிஸில் நாடுகளின் அணிவகுப்பு பாரிஸின் மையத்தில் ஓடும் செய்ன் ஆற்றின் குறுக்கே நடக்க உள்ளது. சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு நாட்டின் வீரர்கள் குழுவும் படகில் பயணம் செய்வார்கள்.

Olympics 2024 Paris Olympics 2024 2024

இந்த தனித்துவமான விழாவில், 10,000 க்கும் மேற்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் சுமார் 100 படகுகளில் பயணம் செய்து நோட்ரே டேம், பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் மற்றும் பாண்ட் நியூஃப் போன்ற சின்னமான பாரிஸின் அடையாளங்களைக் கடந்து செல்வார்கள்.

வீரர்கள் அணிவகுப்பு ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி, ஃபிரான்ஸ் நாட்டின் அடையாளச் சின்னமான ஈபிள் கோபுரத்திற்கு முன்னால் உள்ள ட்ரோகாடெரோவில் முடிவடையும். பின்னர், அங்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறும். அணிவகுப்பின் போது, ​​தொடக்க விழாவில் பங்கேற்க உள்ள கலைஞர்கள், பல்வேறு நாடுகளின் தூதுக் குழுக்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள் சேர்ந்து, நிகழ்வின் காட்சியையும் பிரம்மாண்டத்தையும் சேர்ப்பார்கள் என பாரிஸ் ஒலிம்பிக் நிர்வாகிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸ் தொடக்க விழா இந்தியாவில் எப்போது தொடங்குகிறது?

பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸ் தொடக்க விழா இந்தியாவில் இந்திய நேரப்படி (IST) இரவு 11:00 மணிக்கு தொடங்குகிறது.

பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழாவை இந்தியாவில் நேரடியாக எங்கே பார்க்கலாம்?

இந்தியாவில் உள்ள ரசிகர்கள், பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழாவின் நேரடி ஒளிபரப்பை ஸ்போர்ட்ஸ் 18 (Sports18 1 SD, Sports18 1 HD TV) சேனல்களில் பார்க்கலாம்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழாவை இந்தியாவில் நேரலையில் எங்கு பார்க்கலாம்?

ஜியோ சினிமாவில் இலவச லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஒலிம்பிக் தொடரை பார்க்கலாம்.

Story first published: Friday, July 26, 2024, 8:45 [IST]
Other articles published on Jul 26, 2024
English summary
Paris Olympics 2024: Opening Ceremony When and where to watch free live streaming?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+