Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

32 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் கரை சேர்ந்த பாகிஸ்தான்.. இதுவரை வென்ற பதக்கங்கள் எத்தனை?

பாரிஸ்: ஒலிம்பிக் வரலாற்றில் பாகிஸ்தான் அணி 32 ஆண்டுகளுக்குப் பின்பு முதன் முறையாக பதக்கம் வென்று இருக்கிறது. இந்த தகவல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 1992 ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது. அதன் பின்பு 32 ஆண்டுகளாக ஒலிம்பிக் தொடரில் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தானின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்று அந்தக் குறையை போக்கி இருக்கிறார். மேலும், இது ஒலிம்பிக் வரலாற்றில் பாகிஸ்தான் வென்ற நான்காவது தங்கப்பதக்கம் ஆகும். இதற்கு முன் பாகிஸ்தான் ஹாக்கி அணி மூன்று முறை தங்க பதக்கம் வென்று இருக்கிறது. ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றில் அர்ஷத் நதீம் வென்ற தங்கத்தையும் சேர்த்து பாகிஸ்தான் மொத்தம் 11 பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது.

Olympics 2024 Paris Olympics 2024 Javelin Throw 2024

அவற்றில் எட்டு பதக்கங்கள் பாகிஸ்தான் ஆடவர் ஹாக்கி அணியால் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 1956 ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தான் முதல் முறையாக பதக்கம் வென்றது. அப்போதைய பாகிஸ்தான் ஹாக்கி அணி வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தது.

ஒலிம்பிக் தொடர்களில் பாகிஸ்தான் ஹாக்கி அணி சிறப்பாக செயல்பட்டு மொத்தம் எட்டு பதக்கங்கள் வென்ற நிலையில், மல்யுத்தத்தில் 1960இல் ஒரு வெண்கல பதக்கமும், குத்துச்சண்டையில் 1988இல் மற்றொரு வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளது பாகிஸ்தான்.

1992 க்கு பின் பாகிஸ்தான் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. இந்தியா இந்த இடைப்பட்ட காலத்தில் 26 பதக்கங்கள் வென்றது.
1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்லாத நிலையில், பாகிஸ்தான் ஒரு வெண்கல பதக்கம் வென்று இந்தியாவை முந்தி இருந்தது.

தற்போது மீண்டும் இந்தியாவை, பாகிஸ்தான் முந்தி உள்ளது. 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே வென்றது. பாகிஸ்தான் ஒரு தங்கப்பதக்கம் வென்று இருப்பதால் பதக்கப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

Story first published: Friday, August 9, 2024, 13:03 [IST]
Other articles published on Aug 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+