Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் - இந்தியாவுக்காக நான் ஆடிய கடைசி போட்டி இதுதான்.. ரோஹன் போபண்ணா ஓய்வு அறிவிப்பு

பாரிஸ்: டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, பிரான்ஸ் அணிக்கு எதிரான 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய டென்னிஸில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

"நாட்டுக்கான எனது கடைசி நிகழ்வாக இது நிச்சயம் அமையும். நான் எங்கே இருக்கிறேன் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன், அது போகும் வரை டென்னிஸ் சுற்றுகளை ரசிக்கப் போகிறேன்" என்று போபண்ணா கூறி இருக்கிறார்.

Olympics 2024 Paris Olympics 2024 2024

அவர் இனி தொழில்முறை டென்னிஸ் தொடர்களான கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஏடிபி டென்னிஸ் தொடர்களில் மட்டுமே பங்கேற்பார். ஆனால், அதிலும் தன்னால் முடிந்தவரை மட்டுமே பங்கேற்பேன் என கூறி இருக்கிறார். ஏற்கனவே, தனது வயதின் காரணமாக இந்தியாவுக்காக டேவிஸ் கோப்பையில் இனி விளையாடப் போவதில்லை என அறிவித்து இருந்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் தொடர் ஆகியவற்றில் இருந்தும் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

"நான் இருக்கும் இடத்திற்கு இது ஏற்கனவே ஒரு பெரிய போனஸ். இரண்டு தசாப்தங்களாக நான் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று நான் நினைக்கவே இல்லை. 2002 முதல், நான் அறிமுகமாகி 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்றார் ரோஹன் போபண்ணா

ஜூலை 28 அன்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் போபண்ணா மற்றும் என் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி பிரெஞ்சு ஜோடியான எட்வர்ட் ரோஜர்-வாசெலின் மற்றும் கேல் மான்ஃபில்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

இந்தியாவுக்காக லியாண்டர் பயஸ் டென்னிஸிற்கான கடைசி ஒலிம்பிக் பதக்கத்தை வென்றார். பயஸ் 1996ல் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன் பின் இந்தியா டென்னிஸில் பதக்கம் வெல்லவில்லை.

போபண்ணா மற்றும் சானியா மிர்சா 2016 இல் பதக்கத்தை வெல்வதற்கு அருகில் வந்தனர் ஆனால் கலப்பு போட்டியில் நான்காவது இடத்தை மட்டுமே பிடித்தனர்.

Story first published: Tuesday, July 30, 2024, 9:02 [IST]
Other articles published on Jul 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+