Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் - கணவரை கிண்டல் செய்தவர்களுக்கு நெத்தியடி கொடுத்த அமெரிக்கா ஜிம்னாஸ்டிக் வீராங்கனை

பாரிஸ்: அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் தனது கணவர் தான் வென்ற தங்கப் பதக்கத்தை அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்களை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சைமன் பைல்ஸ் உலகின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார்.

அமெரிக்காவை சேர்ந்த அவர் இதுவரை 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்று இருக்கிறார். அதில் ஏழு தங்கப் பதக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மட்டும் அவர் மூன்று தங்க பதக்கங்களை வென்றார். அதன் பின் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் அவர் வென்ற தங்கப் பதக்கத்தை அவரது கணவர் ஓவன்ஸ் அணிந்து இருந்தார். அந்த பதிவின் கீழ் பலரும் ஓவன்ஸ்-ஐ விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு இருந்தனர்.

Olympics 2024 Paris Olympics 2024 2024

"எதற்காக அவர் அதை அணிந்து இருக்கிறார்? அவர் அந்த பதக்கத்தை வென்றாரா?" என சிலரும், "அந்த தங்கத்தை அணிந்திருக்கும் போது அவர் மிகவும் மோசமாக இருக்கிறார்" என சிலர் அவரை விமர்சித்தும், கிண்டல் செய்தும் இருந்தனர். இதைக் கண்டு கோபமடைந்த சைமன் பைல்ஸ் அந்த பதிவுகளுக்கு பதிலடி கொடுத்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், "எனது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் நான் அந்த பதக்கத்தை அணிவிப்பேன். அதை நான் புகைப்படம் எடுத்து வெளியிடுவேன். எனவே, நீங்களாக எதையாவது நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் அனைவரும் மிகவும் மோசமான பரிதாபத்துக்குரியவர்கள். எங்களை தனிமையில் இருக்க விடுங்கள்" என அவர் தன் கணவரை விமர்சனம் செய்பவர்களை சாடி இருக்கிறார்.

இதற்கு முன்பும் ஓவன்ஸ்-ஐ பலரும் கிண்டல் செய்து இருக்கின்றனர். அப்போதும் சைமன் பைல்ஸ் இது போன்ற பதிலடியை கொடுத்து இருக்கிறார். முன்பு ஒருமுறை, "என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், என் குடும்ப உறுப்பினர்களை பற்றி எதுவும் பேசாதீர்கள். நான் நீண்ட காலமாக புகழ் வெளிச்சத்தில் இருக்கிறேன். இதை என்னால் உதறி விட்டு சென்று விட முடியும். ஆனால், என் குடும்பத்தினரை பற்றி பேசுவதை என்னால் ஏற்க முடியாது" என கூறி இருந்தார்.

Story first published: Monday, August 5, 2024, 12:21 [IST]
Other articles published on Aug 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+