For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கப் போவது இந்த ஒரு விஷயத்தில் தான்.. விளாசித் தள்ளிய கவாஸ்கர்

மும்பை: இந்திய பேட்மிண்டன் வீரர்கள் 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒலிம்பிக் தொடரில் ஒரு பதக்கம் கூட வெல்லாமல் வெறும் கையுடன் நாடு திரும்பி உள்ளனர். கடைசியாக 2008 பீஜிங் ஒலிம்பிக் தொடரில் இந்தியா பேட்மிண்டனில் பதக்கம் வெல்லாமல் இருந்தது. அதன் பின் 2012, 2016 மற்றும் 2020 ஒலிம்பிக் தொடர்களில் ஒரு பதக்கமாவது கிடைத்து வந்தது.

ஆனால், 2024 ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் வீரர்களும் பெரும் ஏமாற்றம் அளித்தனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இடம் பெற்ற லக்சயா சென் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி வரை முன்னேறி இருந்தார். ஆனால், அதில் அவர் தோல்வியடைந்தார்.

Olympics 2024 Paris Olympics 2024 badminton 2024

அப்போது அவருக்கு பல்வேறு வகைகளில் ஆதரவளித்து வந்த முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே கடுமையாக விமர்சித்தார். அவர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், "இனியும் இந்திய விளையாட்டு வீரர்கள், இந்திய அரசையும் விளையாட்டு துறையையும் குறை கூறிக்கொண்டு இருக்க முடியாது. அவர்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கிறார்கள். இனி தோல்விகளுக்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்." என கூறி இருந்தார்.

அதற்கு இந்திய பேட்மிண்டன் வீரர்கள் சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரகாஷ் படுகோனேவின் நண்பருமான சுனில் கவாஸ்கர் கடுமையான எதிர்வினை ஆற்றி இருக்கிறார். இந்தியா சாக்கு போக்கு சொல்வதில் ஒவ்வொரு முறையும் தங்கப்பதக்கம் வெல்லும் என சிண்டலாக சொல்லி இருக்கிறார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், "ஒவ்வொரு முறையும் சாக்கு போக்கு சொல்வதில் தான் நமது நாடு தங்கப் பதக்கம் வெல்லும். பிரகாஷ் படுகோனேவின் விமர்சனம் பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பதற்கானது அல்ல. அவர் ஒட்டுமொத்தமாக என்ன நடக்கிறது என சொல்லி இருக்கிறார். ஒரு வீரர் அவரது செயல்பாட்டுக்கு பொறுப்பேற்கவில்லை என்றால், யார் அதற்கு பொறுப்பு ஏற்பார்கள்? பிரகாஷ் படுகோனே சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. அவர் தவறான நேரத்தில் இதை சொல்லி இருக்கிறார் என்கிறார்கள். ஆனால், வீரர்கள் எப்போதும் சாக்குபோக்கு சொல்வதையும், எங்களுக்கு ஆதரவு வேண்டும் என்று சொல்வதையும் தான் செய்கிறார்கள். பிரகாஷ் படுகோனே இதை ஒரு அறையில் வைத்து தனிமையில் சொல்லி இருக்கலாம். ஆனால், பொதுவெளியில் வைத்து சொல்லப்படும் விஷயங்களுக்கு தான் தாக்கம் அதிகம்." என்றார் கவாஸ்கர்.

Story first published: Tuesday, August 13, 2024, 18:40 [IST]
Other articles published on Aug 13, 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+