Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் - வரலாறு படைத்த சிங்கப்பெண் வினேஷ்.. மாமா சொன்ன அட்வைஸ்.. வெற்றிக்கு காரணமே அதுதான்

பாரிஸ் : இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் 2024 ஒலிம்பிக் தொடரில் மகளிர் 50 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை செய்து இருக்கிறார். அவரது இந்த சாதனைக்கு அவரது மாமா மகாவீர் போகட்டுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

அவர் அரை இறுதியில் கியூபாவை சேர்ந்த யூச்நெய்ல் குஸ்மான்-ஐ எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் 5 - 0 என ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றார். இதை அடுத்து தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகட் தகுதி பெற்றார். இதன் மூலம் அவருக்கு உறுதியாக ஒரு பதக்கம் கிடைக்கும்.

Olympics 2024 Paris Olympics 2024 2024


இந்த ஒலிம்பிக் தொடரின் முதல் சுற்றிலேயே வினேஷ் போகட் தோல்வி அடைவார் என்ற கணிப்பு இருந்தது. அதை உடைத்ததாலேயே அவர் வெற்றிநடை போட்டு இறுதிப் போட்டி வரை வந்து இருக்கிறார். அந்த முதல் சுற்றுப் போட்டியின் வெற்றிக்கு காரணம் வினேஷின் மாமா மகாவீர் போகட் என கூறப்படுகிறது.

மகாவீர் போகட் தான் வினேஷ் போகட்டுக்கு துவக்கத்தில் மல்யுத்தம் கற்றுத் தந்தவர். அவர் துரோணாச்சாரியார் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இந்திய மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவில்லை. அதே சமயம், அவர் ஒலிம்பிக் தொடருக்கு செல்லும் முன் வினேஷ் போகட்டின் பயிற்சியாளர் வீரேந்தர் தாஹியாவிடம் முதல் சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான ஜப்பானின் சுசாகியை எப்படி வீழ்த்துவது என்பது குறித்து வியூகம் ஒன்றை வகுத்து கொடுத்து இருக்கிறார்.

ஜப்பானின் சுசாகி கடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்றவர். மேலும் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். அவரிடம் வினேஷ் போகட் தோல்வியடைவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், மகாவீர் போகட் கூறிய திட்டத்தின் படி முதல் சூற்றில் சுசாகிக்கு எதிராக வினேஷ் தற்காப்பு ஆட்டம் ஆடினார். முதல் சுற்றில் அதிக புள்ளிகளை விட்டுக் கொடுக்காமல் இருந்தார். இரண்டாவது சுற்றில் கடைசி நேரத்தில் சுசாகிக்கு எதிராக அதிரடியாக தாக்குதல் பாணி ஆட்டத்தை ஆடி 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

அப்போதே வினேஷ் போகட் ஒலிம்பிக் பதக்கம் வென்றது போல மகிழ்ச்சி அடைந்தார். அவர் நினைத்தது போலவே மற்ற சுற்றுகள் அவருக்கு எளிதாக இருந்தது. அவற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறி இருக்கிறார். அவரது மாமா மகாவீர் கடினமான போட்டிக்கான வியூகத்தை வகுத்துக் கொடுத்ததும் அவரது இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Story first published: Tuesday, August 6, 2024, 23:47 [IST]
Other articles published on Aug 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+