Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இமான் கெலிஃப்-க்கு நுண் ஆண்குறி, கர்ப்பப்பை இல்லை.. ஒலிம்பிக் தங்கம் வென்ற வீராங்கனை குறித்த சர்ச்சை

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமான் கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த மருத்துவ அறிக்கையை கைப்பற்றி இருக்கிறார்.

அந்த அறிக்கையில் இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் (XY Chromosome) இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

paris olympics 2024 olympics imane khelif 2024

ஆண்களுக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருக்கும். பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் குரோமோசோம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இமான் கெலிஃப்-க்கு உடலின் உட்புறமாக ஆண்களுக்கு இருப்பது போன்ற விதைப்பைகள் இருப்பதும், நுண் ஆண் குறி இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது. இதை அடுத்து ஆண் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்ட ஒருவரை பெண்களுக்கான குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்க வைத்தது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.

சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு அவர் ஆண் என முன்பே தடை செய்திருந்தது. அதையும் மீறி சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அவரை மகளிர் குத்துச்சண்டை பிரிவில் அனுமதித்தது எப்படி? என்ற சர்ச்சை வெடித்து இருக்கிறது. அவர் 2023 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் போது உலக சர்வதேச குத்து சண்டை அமைப்பால் இறுதிப் போட்டிக்கு முன் தடை செய்யப்பட்டு இருந்தார்.

அவரது மருத்துவ பரிசோதனையில் அவர் ஆண் என நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அப்போது காரணம் சொல்லப்பட்டது. அழுத்தம் காரணமாக அந்த அறிக்கையை சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு வெளியிட முடியாத நிலை இருந்தது. பின்னர் இமான் கெலிஃப் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.

அவருடனான போட்டியின் போது இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி 46 வினாடிகளில் போட்டியில் இருந்து விலகினார். தன் வாழ்வில் இத்தனை வேகமான தாக்குதலை சந்தித்ததில்லை என மறைமுகமாக இமான் கெலிஃப் ஒரு ஆண் என்பதை சுட்டிக்காட்டி அவர் விலகி இருந்தார்.

பெண்ணாக பிறந்தேன்.. பெண்ணாகவே வென்றுள்ளேன்.. யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.. இமான் கலீஃப்!

ஆனால், இமான் கெலிஃப் பெண் தான் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டமாக கூறியது. மேலும், அந்த முடிவை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஆதரித்து அறிக்கையும் வெளியிட்டு இருந்தது. ஆனால், தற்போது இமான் கெலிஃப் ஆண் என்பது மருத்துவ அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளதால் அவரது தங்கப் பதக்கத்தை பறிக்க வேண்டும் என்றும், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் இமான் கெலிஃப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலரும் வாதிட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

Story first published: Tuesday, November 5, 2024, 8:10 [IST]
Other articles published on Nov 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+