ஜகார்தா: இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் காஷ்யப் தோல்வியடைந்து வெளியேறினார்.
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி, அந்த நாட்டு தலைநகர் ஜகார்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் பிரிவில் அரை இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 12வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் காஷ்யப், ஜப்பான் வீரர் மெமட்டோவை எதிர்கொண்டு விளையாடினார்.

இதில் 21-12,17-21, 19-21 என்ற செட் கணக்கில் காஷ்யப் தோல்வி அடைந்து வெளியேறினார். இதன் மூலம் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்தது,
இவ்விரு வீரர்களும் 2 வருடங்களுக்கு முன்பு நேருக்கு நேர் சந்தித்திருந்தனர். அப்போதும், மெமட்டோதான் வெற்றி பெற்றிருந்தார்.
இருப்பினும், நேர் செட்களில் காஷ்யப் தோல்வியடையவில்லை என்பது ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தியாகும். போராடிதான் காஷ்யப் தோற்றார்.