Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குத்துச்சண்டையில் பர்வீன் ஹூடா வெற்றி.. சீன தைபே வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவுக்கு 13வது தங்கம்

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் 65 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை பர்வீன் ஹூடா வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீன தைபே வீராங்கனை சென் நியென்-சினை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 13வது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது.

Parveen Hooda Wins Gold Medal in Boxing at Asian Games 2026 Defeating Paris Olympic Medallist

நகோயாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் பர்வீன் ஹூடா மற்றும் சீன தைபேயின் அனுபவ வீராங்கனை சென் நியென்-சின் மோதினர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக தொடங்கினாலும், முதல் எச்சரிக்கைக்குப் பிறகு பர்வீன் ஆக்ரோஷமாக நேர் ஜாப்களால் தாக்கினார். முதல் சுற்றை அனைத்து நடுவர்களும் 5-0 என்ற கணக்கில் ஏகோபித்த முடிவாக பர்வீனுக்கு ஆதரவாக வழங்கினர்.

சீன தைபே வீராங்கனை சென், 2வது சுற்றில் கடுமையான ஆக்ரோஷத்துடன் திரும்பி வந்து பர்வீனை நிலைகுலைய வைத்தார். இந்த சுற்றை 5-0 என சென் கைப்பற்ற, ஆட்டம் 1-1 என சமநிலையானது. தங்கத்தை தீர்மானிக்கும் 3வது சுற்றில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதினர். ஒருவரையொருவர் பிடித்து இழுத்து குத்தினர். பர்வீன் சாதுரியமாக தூரமாக இருந்து வெற்றிக்கு தேவையான புள்ளிகளை தற்காத்துக் கொண்டார்.

முடிவில் 5 நடுவர்களில் 3 நடுவர்கள் பர்வீன் ஹூடாவிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இதன் மூலம் 3-2 என்ற பிரிப்பு முடிவு அடிப்படையில் த்ரில்லர் வெற்றி பெற்று பர்வீன் ஹூடா ஆசிய சாம்பியனாக மகுடம் சூடினார். 2023 ஆசிய விளையாட்டில் வென்ற பதக்கம் தனது தங்குமிடத்தை குறிப்பிட்ட நேரத்தில் சொல்லாத காரணத்தால் பறிக்கப்பட்டு பின்னடைவை சந்தித்து இருந்தார் பர்வீன். அதனால் ஏற்பட்ட தடைகள் மற்றும் இடைநீக்கங்களை கடந்து, கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கம்பேக் கொடுத்து தங்கப் பதக்கத்தை வென்று இருக்கிறார் பர்வீன் ஹூடா.

Story first published: Friday, October 2, 2026, 14:51 [IST]
Other articles published on Oct 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+