3வது முறை பைனலில் பட்னா பைரேட்ஸ்... சென்னையில் ஹாட்ரிக் அடிக்குமா?
சென்னை: சென்னையில் நேற்று நடந்த புரோ கபடி லீக் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் பட்னா பைரேஸ்ட் அணி, 47-44 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வென்றது. இதன் மூலம், மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. சென்னையில் நாளை நடக்கும் பைனலில் குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியை வென்று ஹாட்ரிக் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டியின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னையில் நேற்று இரவு நடந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், பட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.

ரெய்டு மிஷின் என்றழைக்கப்படும் பிரதீப் நர்வால், 23 புள்ளிகளை எடுத்து பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். இந்த சீசனில் 350 ரெய்டு புள்ளிகளை அவர் எட்டினார்,.
இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக பைனல் போட்டிக்கு பட்னா பைரேட்ஸ் அணி முன்னேறியுள்ளது. சீசன் 3 மற்றும் 4ன் சாம்பியனான பட்னா பைரேட்ஸ் அணி ஹாட்ரிக் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னையில் நாளை நடக்கும் பைனலில் பட்னா பைரேட்ஸ் அணியும், குஜராத் பார்சூன்ஜயன்ஸ்ட் அணியும் மோத உள்ளன.
Story first published: Friday, October 27, 2017, 14:33 [IST]
Other articles published on Oct 27, 2017


Click it and Unblock the Notifications