Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் பீல்டிங் கோச் ட்ரெவர் பென்னி

Trevor Penney
டெல்லி: இங்கிலாந்து அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளரான ட்ரெவர் பென்னியை இந்திய அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்கு இந்திய தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பென்னியும் உடன்செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான முடிவு புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் மற்றும் பிசிசிஐ செயலர் சீனிவாசன் இடையேயான கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது.

பென்னியின் பெயரை பிளட்சரே பரிந்துரை செய்துள்ளார். எனினும் பென்னியின் நியமனம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த முறை இந்தியாவின் ஃபீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங் இருந்தார். ஆனால் அவர் 2009-ல் நீக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+