Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க நிறுத்துங்க முதல்ல.. அப்பத்தான் அது நடக்காது.. மைக்கேல் ஹோல்டிங் ஆவேசம்

டெல்லி: விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் இனவெறித் தாக்குதலுக்கு சமூகம்தான் காரணம். சமூகம்தான் முதலில் திருந்த வேண்டும் என்று முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.

கருப்பர் இனத்தவரான ஜார்ஜ் பிளாயிட் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. பிளாயிட் படுகொலைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

இந்த நிலையில், கருப்பர் இனத்தவர்கள் எங்கெல்லாம் பாகுபாடு காட்டப்படுகின்றனர் என்ற புதிய சர்ச்சையும் வெடித்துள்ளது. குறிப்பாக விளையாட்டுத்துறையில் அவர்கள் சந்தித்து வரும் சங்கடங்கள் தற்போது அம்பலமாகி வருகின்றன. இதனால் குமுறல்களும் வெடித்து வருகின்றன.

ஹோல்டிங் கருத்து

ஹோல்டிங் கருத்து

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மைக்கேல் ஹோல்டிங் கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங் இதுகுறித்துக் கூறுகையில், விளையாட்டுத்துறையில் உள்ள இனவாதத்திற்கு விளையாட்டு வீரர்கள் காரணமில்லை. சமூகம்தான் இதற்கு காரணம். சட்டம் போட்டு இதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மைதானங்களில் இனவெறி

மைதானங்களில் இனவெறி

தொடர்ந்து கிரிக்கெட் மைதானங்களில் இனவெறி தாண்டவமாடும். கால்பந்து மைதானங்களில் தாண்டவமாடும். மக்கள்தான் இதைத் தடுக்க முன்வர வேண்டும். அப்படி வராதவரை இது நடக்கத்தான் செய்யும். இனவெறியை ஒழிக்க வீரர்களால் மட்டுமே முடியாது. சட்டங்களால் மட்டுமே முடியாது. மக்கள் முன்வர வேண்டும், சமூகம் முன்வர வேண்டும் என்றார் ஹோல்டிங்.

புகழ் பெற்ற வீரர்

புகழ் பெற்ற வீரர்

மைக்கேல் ஹோல்டிங் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அசைக்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர். 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 249 விக்கெட்களை வீழ்த்தியவர். 1975 முதல் 1987 வரை கிரிக்கெட் ஆடியவர். இன்ஸ்டாகிராம் சாட் ஒன்றில் பேசும்போது இனவெறி குறித்து அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார். அப்போதுதான் இதுபோல ஆவேசமாக பேசினார்.

சமூகம் திருந்த வேண்டும்

சமூகம் திருந்த வேண்டும்

ஹோல்டிங் மேலும் கூறுகையில், மைதானங்களில் வீரர்களைப் பார்த்து இனவெறி கருத்துக்களைக் கூறுவது யார்.. மக்கள்தானே.. மக்களிடமிருந்துதானே அவர்கள் வருகிறார்கள்.இந்த சமூகத்திலிருந்துதானே வருகிறார்கள். எனவே அவர்கள் நினைத்தால்தான் இதை நிறுத்த முடியும். அவர்கள்தான் இதைச் செய்ய வேண்டும். இதற்கும் விளையாட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்றார் ஹோல்டிங்.

சமி வேதனை

சமி வேதனை

ஏற்கனவே ரசிகர்களிடமிருந்து வரும் இனவெறி துவேஷம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் டேரன் சமி, கிறிஸ் கெய்ல் ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம். அதேபோல கருப்பர் இனத்தைச் சேர்ந்த பல்வேறு புகழ் பெற்ற விளையாட்டு ஜாம்பவான்களும் தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமி தன்னை ஐபிஎல் போட்டியின்போது இனவெறி வார்த்தையைப் பயன்படுத்தி ரசிகர்கள் கிண்டல் செய்ததாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

Story first published: Monday, June 8, 2020, 14:53 [IST]
Other articles published on Jun 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+