19வது தங்கப் பதக்கம்.... ஓய்வுக்கு மூட்டை கட்டி வைத்து மீண்டும் வந்து அசத்திய பெல்ப்ஸ்!
ரியோ: நடப்பு ஒலிம்பிக்கில் 19-வது தங்கப் பதக்கத்தை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளார் அமெரிக்கா நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். இத்தனைக்கும் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு மீண்டும் களத்துக்கு வந்து சாதிதித்திருக்கிறார் பெல்ப்ஸ்.
2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கமும் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கமும் லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கமும் பெல்ப்ஸ் வென்றிருந்தார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரை பெல்ப்சின் கணக்கில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்தார்.

பாதித்த தோல்வி
கடந்த 2013ம் ஆண்டு பிரான்சில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் பெல்ப்ஸ் இல்லாத அமெரிக்க அணி தொடர் நீச்சலில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. வெள்ளிப் பதக்கத்தோடு அமெரிக்கா அணி நாடு திரும்பியதை தாங்க முடியாதவராகொள்ளதவரானார் பெல்ப்ஸ்.

ரியோவில் சாதனை
இதனால் ஓய்வை மூட்டை கட்டி வைத்தார். மீண்டும் நீச்சல் களத்துக்கு வந்தார். தற்போது ரியோ ஒலிம்பிக்கிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார் பெல்ப்ஸ்.

அமெரிக்கா தங்கம்
ரியோவில் 4x100 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது. அமெரிக்கக் குழு 3 : 9.92 விநாடிகளில் கடந்து தங்கத்தை தட்டி சென்றது.

தொடரும் வேட்டை
தற்போது பெல்ப்சின் ஒலிம்பிக் தங்கப்பதக்க எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை உள்ளிட்ட சில பிரிவுகளில் பெல்ப்ஸ் கலந்து கொள்கிறார். இதனால் பெல்ப்ஸின் பதக்க வேட்டை அதிகரிக்கவே செய்யலாம்.


Click it and Unblock the Notifications