Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக்ஸ்... கண்களை கவரும் ரம்மியமான புகைப்படத் தொகுப்பு!

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மரக்கானா மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்கவிழாவின் போது ஜொலித்த மராக்கானா மைதானத்தின் புகைப்படத் தொகுப்பை காணலாம்.

31-வது ஒலிம்பிக்ஸ் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் தொடங்கியது.இந்த ஒலிம்பிக்ஸில் 206 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகனை குழுக்கள் கலந்து கொண்டன. இந்த முறை அகதிகள் அணியும் ஒலிம்பிக்ஸில் பங்கேற்பது குறிப்பிடத்தக்ககது.

ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் இந்திய குழுவில் 120 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய குழுவிற்கு தலைமை தாங்கிய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா இந்திய மூவர்ண கொடியை ஏந்திச் சென்றார்.ரியோ ஒலிம்பிக்கிஸில் தொடக்க விழாவின் போது நிகழ்ந்தப்பட்ட கண்கவர் நிகழ்ச்சிகளை இப்போது பார்க்கலாம்.

ஒலிம்பிக்ஸ் வலையங்கள்

ஒலிம்பிக்ஸ் வலையங்கள்

ரியோ ஒலிம்பிக்ஸ் தொடங்குவதையொட்டி, மராக்கானா மைதானம் வண்ண மயமாக ஜொலித்தது. மாயாஜாலம் செய்வது போல ஒளி கற்றைகள் பாய்ச்சப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தது. இதனியே ஒலிம்பிக்ஸ் சின்னமான ஐந்து வளையங்களைகொண்ட காட்சி.

அமைதிப் புறா

அமைதிப் புறா

தொடக்க விழாவை காண வந்த பார்வையாளர் ஒருவர் அமைதியை வலியுறுத்தும் வகையில் ஒரு மெசேஜ் சொல்லியிருக்கிறார். அதாவது, காகிதத்தால் புறா செய்துள்ள அவர், அமைதி மற்றவர்களிடம் இருந்து உருவாவதில்லை என்றும், அது நம்மிடம் இருந்தே உருவாகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் கொப்பரையில் தீபஜோதி

ஒலிம்பிக் கொப்பரையில் தீபஜோதி

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி தொடக்கவிழாவில் ஒலிம்பிக் கொப்பரையில் தீப ஜோதி ஏற்றப்பட்டது. அப்போது, கொப்பரையில் எரியும் தீபஜோதி ரம்மியமாக தெரியும் வகையில் செய்யப்பட்டிருந்த சிறப்பு ஏற்பாடு.

ஒலிம்பிக்ஸில் வீரர்கள்-வீராங்கனைகள்

ஒலிம்பிக்ஸில் வீரர்கள்-வீராங்கனைகள்

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்-வீராங்கனைகள் அடங்கிய ஒரு படத் தொகுப்பு தான் இந்தப் படம்.

மரக்கானா மைதானம்

மரக்கானா மைதானம்

இது தான் மராக்கான மைதானத்தில் 'டாப் வியூவ்'. ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவின் போது மரக்கானா மைதானம் வண்ண வண்ண லேசர் ஒளிக் கற்றைகளால் ஜொலிக்கும் காட்சி.

மைதானத்தில் வீரர்கள்

மைதானத்தில் வீரர்கள்

ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகள் மைதானத்தில் கூடியிருந்த காட்சி. பார்வையாளர்கள் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

Story first published: Saturday, August 6, 2016, 11:42 [IST]
Other articles published on Aug 6, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+