யுவராஜ் காயம்-ஒரு நாள் போட்டியில் ஆடுவது சந்தேகம்

இந்தியா, இலங்கை இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் நாளை ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
இதற்காக இரு அணிகளும் ராஜ்கோட் வந்து சேர்ந்துள்ளன. இந்த நிலையில், யுவராஜ் சிங்கின் இடது கை சுண்டு விரலில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து செளராஷ்டிர கிரிக்கெட் சங்க செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், இடது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் யுவராஜ் சிங்குக்கு வலி ஏற்பட்டுள்ளது. அவர் குணமடைய போதிய அவகாசம் தர அணி நிர்வாகம் விரும்புகிறது.
எனவே அவர் விளையாடுவாரா, மாட்டாரா என்பது குறித்து நாளைதான் தெரிய வரும். நேற்று யுவராஜ் சிங் மருத்துவமனைக்குச் சென்று வந்தார் என்றார்.
யுவராஜ் கையில் என்ன காயம் என்பதை ஷா விளக்க மறுத்து விட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications