Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மன் கி பாத்-ல் ஒலித்த தமிழரின் பெயர்.. பவானி தேவி குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி.. - முழு விவரம்!

டெல்லி: ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளும் தமிழக வீராங்கனை பவானி தேவி குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை நடைபெற உள்ளன.

கடந்த வருடமே நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

தமிழக வீராங்கனை

தமிழக வீராங்கனை

இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தகுதி பெறுவது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சி

மன் கி பாத் நிகழ்ச்சி

பவானி தேவிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒலிம்பிக்ஸ் பற்றிய பேச்சு வரும்போது, மில்கா சிங் என்ற தடகள ஜாம்பவானை யாரால் மறந்து விட முடியும் சொல்லுங்கள். சில நாள்கள் முன்பாக, கொரோனா தொற்று அவரை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது என தெரிவித்தார்.

பெரும் கஷ்டங்கள்

பெரும் கஷ்டங்கள்

தொடர்ந்து பேசிய அவர், மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே போராடி ஒலிம்பிக் வரை தகுதிப்பெற்றுள்ள வீரர்கள் குறித்து பேசினார். அதில் அவர், நமது நாட்டின் பெரும்பாலான வீரர்கள் சிறிய நகரத்தில் இருந்து வருபவர்கள். அவர்களின் கதைகளை கேட்டால் வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை சந்தித்து இருப்பார்கள் என்பது நமக்கு புரியம் எனக்கூறினார். இதற்கு உதாரணமாக பல வீரர்களை கூறிய பிரதமர் மோடி தமிழக வீராங்கனை பவானி தேவிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

வீரர்களுக்கு உதாரணம்

வீரர்களுக்கு உதாரணம்

தமிழக வீரர் பவானி தேவி குறித்து நான் அறிந்தேன். கடும் போராட்டங்களுக்கு இடையே ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பவானியின் பயிற்சிகாக அவரின் தாயார் தனது நகைகளை அடமானம் வைத்து செலவழித்துள்ளார். அவர் தற்போது தனது பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்று அறிந்தேன். இவர் அனைவருக்கும் ஒரு உதாரணம் என பிரதமர் மோடி பாராட்டினார்.

Story first published: Tuesday, June 29, 2021, 16:07 [IST]
Other articles published on Jun 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+