For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைவரும் வாருங்கள்.. டோக்யோ ஒலிம்பிக்கிற்காக பிரதமர் மோடி புதிய முன்னெடுப்பு.. வைரலாகும் ஹேஷ்டேக்!

டெல்லி: ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளும் இந்திய வீரர்ககளுக்காக பிரதமர் மோடி புதிய முயற்சியை முன்னெடுப்பை எடுத்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோவில் அடுத்த மாதம் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை நடைபெற உள்ளன.

கடந்த வருடமே நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது தான் நடைபெறவுள்ளது.

ஒலிம்பிக்கில் இந்தியர்கள்

ஒலிம்பிக்கில் இந்தியர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது எனத்தெரிவித்திருந்தார். மேலும் இந்திய குழுவுக்காக தீம் பாடலும் வெளியிடப்பட்டது.

மன் கி பாத் நிகழ்ச்சி

மன் கி பாத் நிகழ்ச்சி

இந்நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகளுக்காக புதிய முயற்சி ஒன்றை அவர் முன்னெடுத்துள்ளார். இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது நாட்டின் பெரும்பாலான வீரர்கள் சிறிய நகரத்தில் இருந்து வருபவர்கள். அவர்களின் கதைகளை கேட்டால் வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை சந்தித்து இருப்பார்கள் என்பது நமக்கு புரியும்.

கடின உழைப்பு

கடின உழைப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். திறமை, அர்ப்பணிப்பு, மன உறுதி, நேர்மை எல்லாம் சேரும்போது தான் ஒரு சாம்பியன் உருவாகிறார். டோக்கியோவுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரின் சொந்தப் போராட்டமும், பல வருட உழைப்பும் உள்ளது. அவர்கள் தங்களுக்காக மட்டும் செல்லவில்லை, நாட்டிற்காகவும் செல்கிறார்கள்.

முன்னெடுப்பு

முன்னெடுப்பு

கடினமான சூழல்களில் இருந்து ஒலிம்பிக்கில் சாதனை படைத்தவர்கள் பலபேரை குறிப்பிடலாம். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீர‌ர்களை நாம் உற்சாகப்படுத்தவும், ஊக்குவிக்கவும் வேண்டும். எனவே #Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் அவர்களை ஊக்குவிக்க வாருங்கள்.

Story first published: Tuesday, June 29, 2021, 16:07 [IST]
Other articles published on Jun 29, 2021
English summary
PM Modi Praised Indian Team of Tokyo Olympics 2020 in Mann Ki Baat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+