Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அன்று முதல்வர் இன்று பிரதமர்”.. பிரக்ஞானந்தாவுக்கு உயரும் கௌரவம்.. செஸ் போட்டியில் பெரும் சாதனை!

டெல்லி: தமிழகத்தை சேர்ந்த செஸ் ஆட்டக்காரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பெரும் கவுரவத்தை கொடுத்துள்ளார்.

ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் பிரபல செஸ் போட்டித் தொடர் காணொலி காட்சி மூலமாக தற்போது நடைபெற்று வருகிறது.

மொத்தம் 16 பேர் பங்குபெறும் இந்த தொடரில் சமீபத்தில் உலகின் நம்.1 வீரரான கார்ல்சனுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார்.

சாதனை

சாதனை

மொத்தமுள்ள 8 சுற்றுகளில் பிரக்ஞானந்தா ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்தார். எனினும் அதுகுறித்து சற்றும் கவலைக்கொள்ளாத அவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகின் நம்பர் 1 செஸ் ஆட்டக்காரராக வலம் வந்துக்கொண்டிருக்கும் மேக்னஸ் கார்ல்சனையே வீழ்த்தி விமர்சனங்களுக்கு முற்றிப்புள்ளிவைத்தார்.

முதல்வரின் பாராட்டு

முதல்வரின் பாராட்டு

இவரின் இந்த சாதனைக்கு நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவுரவப்படுத்தியிருந்தார். நேற்று காலை பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்த அவர் பதிவிட்ட ட்வீட்டில், சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த - தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி, உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் எனக்கூறியிருந்தார்.

கௌவுரவித்த பிரதமர்

கௌவுரவித்த பிரதமர்

இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தையே பிரக்ஞானந்தா ஈர்த்துள்ளார். இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள அவர், இந்தியாவின் இளம் மேதை பிரக்ஞானந்தா, செஸ் போட்டியின் ஜாம்பவானான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனைப்படைத்ததை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அவரை நினைத்து பெருமை கொள்கிறேன். அவரின் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

பிரக்ஞானந்தா யார்

பிரக்ஞானந்தா யார்

இதனையடுத்து யார் இந்த பிரக்ஞானந்தா என ரசிகர்கள் தேடி வருகின்றனர். சென்னையில் பிறந்து வளர்ந்தவரான பிரக்ஞானந்தாவுக்கு 16 வயது தான் ஆகிறது. இவர் எட்டு வாயதுக்குட்ப்பட்டோருக்கான (2013) மற்றும் 10 வயதுக்குட்பட்டோருக்கான (2015) உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றவர். இதுமட்டுமல்லாமல் 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 23, 2022, 15:58 [IST]
Other articles published on Feb 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+