Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாட்டுக்கே பெருமை!! தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ்-க்கு பிரதமர் வாழ்த்து

டெல்லி : செஸ் விளையாட்டில் இந்திய அளவில் இளம் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேஷ்ஷை பிரதமர் வாழ்த்தியுள்ளார்.

சென்னையை சேர்ந்த குகேஷ் என்ற 12 வயது சிறுவன் செஸ் விளையாட்டில் உலகளவில் மிக குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றவர்களில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார்.

PM Narendra Modi wishes to the Youngest Chess Grandmaster Gukesh

குகேஷ் இந்தியாவின் 59வது கிராண்ட்மாஸ்டர் ஆவார். இந்திய அளவில் மிக குறைந்த வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றவர்களில் முதல் இடமும், உலகளவில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளார் குகேஷ். குகேஷ்ஷின் வயது 12 வருடம், 7 மாதங்கள், 17 நாட்கள் ஆகும்.

குகேஷ்ஷின் இள வயது சாதனை குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன் வாழ்த்துக்களை ட்விட்டரில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தன் வாழ்த்துச் செய்தியில், "செஸ்-இன் சாம்பியன்! இளம் குகேஷ் அவரது சாதனையால் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்" என குறிப்பிட்டு, அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, January 19, 2019, 15:37 [IST]
Other articles published on Jan 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+