பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் டிக்கெட் வாங்க நின்றவர்கள் மீது தடியடி

கொல்கத்தாவில் நடைபெறுவதாக இருந்த இந்தப் போட்டி ஈடன்கார்டன் மைதானம் தயாராகாத காரணதால் பெங்களூருக்கு மாற்றப்பட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. மைதானத்தில் 40 ஆயிரம் பேரை போட்டு அடைக்க முடியும். ஆனாலும் வெறும் 8000 டிக்கெட்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை நூற்றுக்கணக்கானோர் கூடி விட்டனர். டிக்கெட்களை வாங்க அவர்களுக்கிடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.
இதற்கிடையே குறைந்த அளவிலான டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுவதற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலகக் கோப்பைப் போட்டிக்கான ஒருங்கிணைப்புத் தலைவர் சரத் பவாருக்கு அது ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், குறைந்த அளவிலான டிக்கெட்களை விற்பதால், பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அது கூறியுள்ளது. மேலும், கியாஸூங்கா (Kyazoonga) என்ற அதிகாரப்பூர்வ ஆன்லைன் டிக்கெட் விற்பனை இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு இன்னும் டிக்கெட் போய்ச் சேரவில்லை என்றும் ஐசிசி குறை கூறியுள்ளது.
முன்பு சென்னையில் டிக்கெட் வாங்க நின்றவர்கள் அலைமோதியதில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது நினைவிருக்கலாம்.
எதுக்குப்பா இந்த அடிதடி?. அதுதான் டிவில விலாவாரியா 'ரிப்பீட்டு' காட்டி அசத்துகிறார்களே, பிறகு எதற்கு இந்த முட்டல், மோதல். வீட்ல ஜாலியா பார்க்க வேண்டியதுதானே...!
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications