Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்: போலர்ட்-ஷேன் பான்ட் அதிக தொகைக்கு ஏலம்

Bond
மும்பை: இன்று நடந்த ஐபிஎல் மூன்றாவது போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் ஆல் ரவுண்டர் கிரோன் போலர்ட் மற்றும் நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஷேன் பான்ட் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள்.

இருவரும் தோராயமாக ரூ. 3.42 கோடிக்கு ஏலம் போனார்கள். மும்பையில் இந்த ஏலம் நடந்தது.

இதில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே, போலர்ட்டை ஏலம் எடுக்க கடும் போட்டி நடந்தது.

இருப்பினும் மும்பை அணிக்கே கடைசியில் வெற்றி கிடைத்தது.

அதேபோல ஷேன் பான்ட்டை ஏலத்தில் எடுக்க கொல்கத்தாவுக்கும், டெக்கான் சார்ஜர்ஸுக்கும் இடையே கடும் போட்டி நடந்தது.

ஹாடின், ஹியூக்ஸ், மார்டின் (ஆஸி.), மார்க் ராம்பிரகாஷ், ஸ்வான் (இங்கிலாந்து), குலசேகரா, தரங்கா, கந்தாம்பி, சமரசில்வா, வெலகெடரா (இலங்கை), சர்வான், பிராவோ (வெ.இண்டீஸ்), பான்ட், எலியட் (நியூசி.), ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.

2வது அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனவர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கெமர் ரோச். இவரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி 7.20 லட்சம் டாலருக்கு எடுத்தது.

தென்ஆப்பிரிக்க வீரர் வேயன் பார்னலை டெல்லி அணி 6.10 லட்சம் டாலருக்கு ஏலம் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் டேமியன் மார்ட்டினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1 லட்சம் டாலருக்கு ஏலம் எடுத்தது. ஆடம் வோக்ஸ் 50 ஆயிரம் டாலருக்கு ஏலத்தின் மூலம் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க வீரர் ஜஸ்டின் கெம்ப்பை சென்னை அணி 1 லட்சம் டாலருக்கு மீண்டும் ஏலத்தில் எடுத்தது. அதேபோல, இலங்கையின் திசரா பெரரேவையும் 50 ஆயிரம் டாலருக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.

ஏலத்தில் இடம் பெற்றிருந்த ஒரே இந்திய வீரரான முகம்மது கைப், முதல் சுற்றில் விலை போகவில்லை. இருப்பினும் அடுத்த ரவுண்டில் பஞ்சாப் அணி அவரை 2.50 லட்சம் டாலருக்கு எடுத்தது.

ஏலத்தின் நிறைவில் மொத்தம் 56 வீரர்கள் யாராலும் ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்தனர்.
இந்த ஏலத்தில் எந்த பாகிஸ்தானிய வீரரையும் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்- 3 தொடர் மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது.

மொத்தம் 97 வீரர்கள் ஏலமிடப்பட்டனர். இதில், 66 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:34 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+