ரன் அவுட் ஆன கோபத்தில் டிவியை உடைத்தார் ரிக்கி பான்டிங்
அகமதாபாத்: ஜிம்பாப்வே அணியுடனான மோதலின்போது பரிதாபமான முறையில் ரன் அவுட் ஆனதால் கோபமடைந்த ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் தனது அறைக்குத் திரும்பியதும் அங்கிருந்த டிவியை உடைத்து நொறுக்கி விட்டார்.
நேற்று அகமதாபாத்தில், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இப்போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, ரன் எடுக்க கடுமையாக தடுமாறியது. முதல் 20 ஓவர்களில் அவர்களால் ரன் குவிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் நேர்த்தியான முறையில் பந்து வீசினர். பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது.
இதில் முக்கியமான கட்டத்தில் கேப்டன் ரிக்கி பான்டிங் பரிதாபமான முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார். பவுண்டரிக் கோட்டுக்கு அருகில் இருந்தபடி பீல்டர் மாஃபு பந்தை ஸ்டம்பை நோக்கி வீச, அது சரியாக பட்டு பான்டிங்கை ரன் அவுட் செய்தது.
இந்த ரன் அவுட்டால் பெரும் கோபத்துடன் எதையோ திட்டியபடி வெளியேறினார் பான்டிங். போன வேகத்தில் தனது அறையில் இருந்த டிவியை போட்டு உடைத்துள்ளார் பான்டிங் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
ரன் அவுட் ஆனதால் கோபத்துடன் அறைக்கு வந்துள்ள பான்டிங், அங்கிருந்த டிவியில் தனது ரன் அவுட்டைத் திரும்பத் திரும்ப காட்டியதைப் பார்த்து ஆத்திரத்தில் பேட்டால் அடித்து உடைத்து விட்டார்.
ரிக்கி பான்டிங்கின் இந்த கோபாவேசம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறி்தது குஜராத் கிரிக்கெட் சங்கம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications