ஒற்றை ஆளாக ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தினார் பிரதீப் நர்வால்
மும்பை: அடின்னா அடின்னா உங்க வீட்டு, எங்க வீட்டு அடியல்ல, மரண அடி. இந்த டயலாக் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு பொருந்தும், புரோ கபடி லீக் ஆட்டத்தில், பட்னா பைரேட்ஸ் அணி 69-30 என்ற கணக்கில் வென்று ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை துவம்சம் செய்தது.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டியின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. நேற்று இரவு நடந்த எலிமினேட்டர்-2 ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 69-30 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இதன் மூலம், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெளியேற்றப்பட்டது.
புரோ கபடி லீக் சீசன் 5 ஆட்டங்களில், ஏ மற்றும் பி பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகளுக்கு இடையேயான பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.
இதில் ஏ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த புனேரி பல்தான் அணிக்கும், பி பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த யுபி யோத்தா அணிகளுக்கும் இடையேயான முதல் எலிமினேட்டர் போட்டி நடந்தது. இதில் புனேரி பல்தான் 40-38 என்ற கணக்கில் யுபி யோத்தா அணியை வென்றது.

ஹரியானா ஸ்டீலர்ஸை துவம்சம்
ஏ பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும், பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பட்னா பைரேட்ஸ் அணிகளுக்கும் இடையோன இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டமும் நேற்று இரவு நடந்தது. இதில், பட்னா பைரேட்ஸ் அணி தயது தாட்சண்யம் இல்லாமல் 69-30 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை அடித்து துவம்சம் செய்தது.

34 புள்ளிகளை எடுத்தார் பிரதீப் நர்வால்
இந்த சீசனில் மிக அதிக புள்ளிகள் பெற்ற அணியாக பட்னா பைரேட்ஸ் அணி விளங்குகிறது. மேலும், அந்த அணியின் பிரதீப் நர்வால், மிகவும் அதிகபட்சமாக, 34 புள்ளிகள் எடுத்தார். அவர் எடுத்தப் புள்ளிகளைக் கூட, ஹரியானா பைரேட்ஸ் அணி எடுக்கவில்லை.

இந்த சீசனில் அதிக புள்ளிகள் பெற்றார்
இதன் மூலம், இந்த சீசனில் 300 புள்ளிகள் எடுத்த முதல் ரைடராகவும் நர்வாஸ் திகழ்கிறார். அவருடைய ஆட்டத்துக்கு முன்னாள், மத்திய பா.ஜ., அரசுக்கு அடிமைகளாக மாறியுள்ள தமிழக அரசைப் போல, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பணிந்தது.

குஜராத்தும் பெங்காலும் மோதுகின்றன
இன்று நடக்கும் முதலாவது குவாலிபையர் போட்டியில், ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ள குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியும், பி பிரிவில் முதலிடம் பெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.

பட்னா, புனே பலப்பரிட்சை
இன்று நடக்கும் மூன்றாவது எலிமினேட்டர் போட்டியில் முதல் இரண்டு எலிமினேட்டர் போட்டிகளில் வென்ற பட்னா பைரேட்ஸ் அணியும், புனேரி பல்தான் அணிகளும் மோதுகின்றன.


Click it and Unblock the Notifications