Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலில் கார்ல்சன்.. இப்போது குகேஷ்.. பிரக்ஞானந்தா உச்சகட்ட ஃபார்ம்.. நார்வே செஸ்ஸில் அதிரடி

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் 2026 தொடரின் 9-வது சுற்றில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் டி.குகேஷை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் 15 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.

நார்வேயில் நடைபெற்று வரும் இந்த செஸ் தொடரின் 9-வது சுற்று போட்டியில், பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் மோதினர். இதில் குகேஷை வீழ்த்திய பின் பேசிய பிரக்ஞானந்தா, "இந்த ஆட்டம் எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. பொதுவாக குகேஷுக்கு எதிராக நான் விளையாடும்போது அவர் சில விசித்திரமான உத்திகளைக் கையாள்வார், நான் அதிகமாக யோசித்து ஆட்டத்தை இழப்பேன். ஆனால் இம்முறை நேரத்தை சரியாக நிர்வகித்து, கணக்கீடுகளைச் சரியாகச் செய்ததால் வெல்ல முடிந்தது" என்றார்.

Praggnanandhaa Beats Gukesh in Norway Chess 2026 Round 9 Climbs to Second Place

ஹாட்ரிக் வெற்றியுடன் புதிய உத்வேகம்

இந்தத் தொடரில் பிரக்ஞானந்தாவின் ஆட்டம் அசாத்தியமாக உள்ளது. தொடரின் தொடக்கத்தில் குகேஷ் மற்றும் வெஸ்லி சோவிடம் தோல்வியடைந்து கடைசி இடத்தில் தவித்த பிரக்ஞானந்தா, அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று கிளாசிகல் போட்டிகளில் வென்று அசத்தியுள்ளார். உலகின் முன்னணி வீரர்களான மேக்னஸ் கார்ல்சன், அலிரேசா ஃபிரோஸ்ஜா மற்றும் தற்போது குகேஷ் ஆகியோரைத் தொடர்ந்து வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

தற்போது 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள பிரக்ஞானந்தா, முதலிடத்தில் உள்ள வெஸ்லி சோவை விட அரை புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார். இதனால் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை அவர் தக்கவைத்துள்ளார். அதே நேரத்தில், உலக சாம்பியன் குகேஷ் மற்றும் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் தரவரிசையில் பின் தங்கி, கடைசி இடத்தைத் தவிர்க்கப் போராடி வருகின்றனர்.

இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்.. IRE, ENG தொடரில் வாய்ப்பு என தகவல்

இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்.. IRE, ENG தொடரில் வாய்ப்பு என தகவல்

மகளிர் பிரிவில் பிபிசாரா சாம்பியன்

மகளிர் பிரிவில், கஜகஸ்தானின் பிபிசாரா அசாபயேவா உக்ரைனின் அன்னா முசிச்சுக்குடன் போட்டியை டிராவாக்கி 16.5 புள்ளிகளுடன் ஒரு சுற்று மீதமுள்ள நிலையிலேயே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். இந்தியாவின் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனெரு ஹம்பி ஆகியோர் கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர். திவ்யா தேஷ்முக் நேற்று சீனாவின் ஜு ஜினெரிடம் தோல்வியடைந்து பின்னடைவைச் சந்தித்தார்.

Story first published: Friday, June 5, 2026, 9:44 [IST]
Other articles published on Jun 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+