Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஸ்டாலின் சார்.. மிக்க நன்றி” செஸ் ஒலிம்பியாட்டிற்கான ஸ்பெஷல் ஏற்பாடு.. பிரக்ஞானந்தா நெகிழ்ச்சி!!

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான பயிற்சி முகாம் குறித்து தமிழக வீரர் பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

வரும் ஜூலை 28ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும்.

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இந்த போட்டியில் தமிழக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ள வீரர் பிரக்ஞானந்தா தான். இந்தியாவின் 'பி' அணி சார்பாக களமிறங்கும் பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார். குறிப்பாக உலகின் நம்பர். 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.

பிரக்ஞானந்தா பேட்டி

பிரக்ஞானந்தா பேட்டி

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் குறித்து முதல்முறையாக அவர் பேசியுள்ளார். இந்திய அணியின் பயிற்சி முகாம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்ற போது பேசிய அவர், இந்திய அணியின் பயிற்சி முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. செர்பியா தொடரில் பங்கேற்றிருந்ததால் நான் தாமதமாக தான் வந்தேன். எனினும் சக அணியினருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறேன் எனக் கூறினார்.

Recommended Video

ஸ்டாலினை சுற்றும் chess olympiad சர்ச்சையும் அரசியலும்
முதலமைச்சருக்கு நன்றி

முதலமைச்சருக்கு நன்றி

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறுவதன் மூலம், பலருக்கும் செஸ் போட்டி குறித்த ஒரு புரிதல் வரும். குறிப்பாக சென்னையில் நடைபெறுவது செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, July 20, 2022, 16:01 [IST]
Other articles published on Jul 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+