Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக் 2023 - இதயத் துடிப்பை எகிற வைத்த பெங்கால் வாரியர்ஸ்.. போராடி வென்ற யு மும்பா

சென்னை : 2023 புரோ கபடி லீக் தொடரின் 38வது போட்டியில் யு மும்பா அணி - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி இதயத் துடிப்பை எகிற வைப்பதாக இருந்தது.

இந்தப் போட்டியில் கடைசி 5 நிமிடங்களில் பல மாற்றங்கள் நடந்து பரபரப்பை கிளப்பியது. இரண்டாம் பாதியில் பின்தங்கி இருந்த யு மும்பா அணி, கடைசி நிமிடங்களில் அதிரடியாக முன்னேறி 5 புள்ளிகள் முன்னிலை பெற்றது.

ஆனால், கடைசி 5 நிமிடங்களில் 1 புள்ளி வித்தியாசத்துக்கு போட்டியை கொண்டு சென்றது பெங்கால் அணி. எனினும், இறுதியில் யு மும்பா அணி 39 - 37 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணி வெற்றி பெற்றது.

Pro Kabaddi League 2023 : U Mumba vs Bengal Warriors match 38 result

இந்தப் போட்டியில் முதல் ஐந்து நிமிடங்களின் முடிவில் யு மும்பா அணி 5 - 3 என முன்னிலை வகித்தது. அந்த முன்னிலையை தக்க வைத்த அந்த அணி முதல் பாதியில் 18 - 15 என்ற அளவில் முன்னிலை பெற்றது. பெங்கால் அணியின் நட்சத்திர ரைடர் மணிந்தர் தனி ஆளாக தன் அணியைக் காப்பாற்ற போராடிக் கொண்டு இருந்தார்.

பெங்கால் அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டதால் களத்தில் வீரர்கள் இல்லாமல், ரைடர் மணிந்தர் தடுப்பாட்டமும் ஆட வேண்டிய நிலையில் இருந்தார். எனினும், போராடி இரண்டாம் பாதியில் 10 நிமிடங்கள் முடிந்த போது பெங்கால் அணியை 26 - 28 என இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற வைத்தார்.

கடைசி 2 நிமிடங்கள் இருந்த போது யு மும்பா அணி 38 - 33 என முன்னிலை பெற்று போட்டியை மாற்றியது. அப்போது பெங்கால் அணி 4 புள்ளிகளை பெற்றதால் பரபரப்பு எழுந்தது. ஆனால், ஆட்ட நேர முடிவில் யு மும்பா அணி 39 - 37 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, December 24, 2023, 23:25 [IST]
Other articles published on Dec 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+