Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களுக்கு விருது வேண்டாம்.. வேளாண் சட்டத்தை எதிர்த்து படையெடுத்த வீரர்கள்.. டெல்லியில் பரபரப்பு!

டெல்லி : புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பலர் ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்றனர்.

அவர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைக்க சென்றனர். அதனால் பரபரப்பு எழுந்தது. அவர்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.

இதனால் ராஷ்டிரபதி பவன் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. சுமார் 30 விளையாட்டு வீரர்கள் ஒன்றாக திரண்டு ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்றுள்ளனர்.

Punjab sports persons stopped while marching towards Rashtrapathi Bhavan

இது குறித்து மல்யுத்த வீரர் கர்தார் சிங் கூறுகையில், பஞ்சாப்பில் இருந்து 30 விளையாட்டு வீரர்கள் மற்றும் சிலர் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைக்க விரும்பினோம்" என குறிப்பிட்டார்.

டெல்லியில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீவிரமாக இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். அந்த மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வெளிப்படையாக போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு மத்திய அரசு அளித்த பல்வேறு விருதுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக அறிவித்தும் வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே சிலர் ஜனாதிபதி மாளிகை நோக்கி படை எடுத்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது. இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக டிசம்பர் 8ஆம் தேதி அன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பந்த் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் விவசாயிகள் தொடர்ந்து புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

Story first published: Monday, December 7, 2020, 17:36 [IST]
Other articles published on Dec 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+