For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் டாப் 20 பணக்கார விளையாட்டு வீராங்கனை.. இந்தியாவின் பிவி சிந்துவுக்கு இடம்.. எவ்வளவு கோடி?

பெங்களூரு : 2023 ஆம் ஆண்டு உலகின் டாப் 20 பணக்கார விளையாட்டு வீராங்கனைகள் யார் என்பது குறித்து போர்ப்ஸ் நிறுவனம் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் டென்னிஸ் வீராங்கனைகள் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது.

இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரே ஒரு வீராங்கனையும் மொத்த 20 பேரிலே ஒரு பேட்மிண்டன் வீராங்கனையுமான பிவி சிந்து மட்டும்தான் இடம் பிடித்திருக்கிறார். டென்னிஸ் ஜாம்பவான் செரினா வில்லியம்ஸ் ஓய்வு பெற்ற நிலையில் நவமி ஒசாகா காயம் காரணமாக இந்த ஆண்டு விளையாடவில்லை.

PV Sindhu finds place in World top 20 most Paid female athletes in the world in 2023

இதனால் இந்த பட்டியலில் முதலிடத்தை போலாந்த்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் கைப்பற்றி இருக்கிறார். இவர் 2023 ஆம் ஆண்டு 23.9 மில்லியன் அமெரிக்க டாலரை சம்பாதித்து இருக்கிறார். இது இந்திய ரூபாய் மதிப்பில் 199 கோடி ரூபாய் ஆகும். பிரெஞ்சு ஓபன் பட்டத்தை நடப்பாண்டில் இவர் கைப்பற்றியதால் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்தியாவின் பி வி சிந்து இந்த பட்டியலில் 16வது இடத்தை பிடித்திருக்கிறார். பிவி சிந்து 2023 ஆம் ஆண்டு இந்திய ரூபாய் மதிப்பில் 60 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார். இந்த ஆண்டு பிவி சிந்து பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.இதற்கு காரணம் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது அதிலிருந்து பிவி சிந்து மீண்டு வருகிறார்.

28 வயதான பிவி சிந்து தற்போது ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு குடியேறி வந்திருக்கிறார். பிரபல பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே விடம் பயிற்சி செய்து வரும் பிவி சிந்து அடுத்த ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிவி சிந்து தம்மை வழிநடத்தும் பொறுப்பை பிரகாஷ் படுகோனே மேற்கொண்டு இருக்கிறார்.

நான் அவரிடம் தான் பயிற்சி எடுத்து வருகிறேன். இவர் என்னுடன் வழிகாட்டி மட்டுமல்ல என்னுடைய குரு மற்றும் நல்ல நண்பர். என்னிடம் இருக்கும் சிறந்த அம்சங்களை வெளிக்கொண்டுவரும் மேஜிக் பிரகாஷ் படுகோனே சாரிடம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என பிவி சிந்து கூறியுள்ளார்.

Story first published: Friday, December 22, 2023, 19:36 [IST]
Other articles published on Dec 22, 2023
English summary
PV Sindhu finds place in World top 20 most Paid female athletes in the world in 2023 உலகின் டாப் 20 பணக்கார விளையாட்டு வீராங்கனை.. இந்தியாவின் பிவி சிந்துவுக்கு இடம்.. எவ்வளவு கோடி?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+