Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்ஸ் பெண்கள் பேட்மிண்டன்.. முதல் போட்டியை தூசி தட்டிய இந்தியாவின் பிவி சிந்து.. எளிதான வெற்றி

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு குரூப் ஆட்டத்தில் இன்று பிவி சிந்து இஸ்ரேலின் க்செனியா பொலிகர்போவாவ 21-7, 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

ஒலிம்பிக்ஸ் பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தற்போது குழு சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் பேட்மிண்டன் பெண்கள் பிரிவில் 7வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பிவி சிந்து இன்று இஸ்ரேலின் க்செனியா பொலிகர்போவாவை எதிர்கொண்டார்.

இது குழு பிரிவு ஆட்டம் ஆகும். சர்வதேச அளவில் 52வது ரேங்க் வகிக்கிறார். பிவி சிந்து தற்போது குரூப் ஜேவில் விளையாடி வருகிறார்.

சிந்து ரேங்க்

சிந்து ரேங்க்

இந்த குழுவில் பிவி சிந்துதான் உயர் ரேங்க் கொண்ட வீராங்கனை. இதனால் அவர் எளிதாக குழு போட்டிகளை முடித்துவிட்டு அடுத்தடுத்து சுற்றுகளுக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இஸ்ரேல் வீராங்கனை க்செனியாவிற்கு எதிராக போட்டி முழுக்கவே பிவி சிந்து ஆதிக்கம் செலுத்தினார்.

எளிதான ஆட்டம்

எளிதான ஆட்டம்

முதலில் 5 புள்ளிகள் லீட் எடுத்த க்செனியா அதன்பின் பிவி சிந்துவிடம் மொத்தமாக அடங்கினார். லேசாக சறுக்கிய பிவி சிந்து பின் வேகமாக மீண்டு வந்தார்.அதிலும் முதல் சுற்றில் 7 புள்ளிகள் எடுக்கும் வரை நிதானம் காட்டிய சிந்து அதன்பன் பின் வரிசையாக 14 புள்ளிகளை எடுத்தார்.

வெற்றி

வெற்றி

இதன் மூலம் 21-7 புள்ளிகள் பெற்று முதல் செட்டை வென்றார். அடுத்த செட்டிலும் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-10 புள்ளிகள் பெற்று அடுத்த செட்டையும் கைப்பற்றினார். இந்த இரண்டாவது செட்டில் க்செனியா கொஞ்சம் கூட ஆதிக்கம் செலுத்த விடாமல் சிந்து வேகம் காட்டினார்.

சிந்து

சிந்து

ஒரு கட்டத்திற்கு மேல் க்செனியா என்ன செய்வது என்றே தெரியாமல் நிலைகுலைந்து போகும் அளவிற்கு இன்று சிந்துவின் ஆதிக்க இருந்தது. இரண்டு செட்கள் வர மட்டுமே நீண்ட போட்டியில் முழுக்க முழுக்க சிந்துதான் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். இதன் மூலம் இஸ்ரேலின் க்செனியா பொலிகர்போவாவ 21-7, 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து வெற்றிபெற்றுள்ளார்.

Story first published: Sunday, July 25, 2021, 8:02 [IST]
Other articles published on Jul 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+