Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் பேட்மிண்டன்.. ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பிவி சிந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்றார்

டோக்கியோ: ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டென்மார்க்கின் மியாவை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். 21- 15, 21- 13 என்ற நேர் செட்களில் பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

Recommended Video

PV Sindhu storms into quarter-finals | Tokyo 2020 | Olympics

ஒலிம்பிக் 2020 தொடரில் இந்தியா சார்பாக பெண்கள் பேட்மிண்டன் பிரிவில் பிவி சிந்து தொடர்ந்து கலக்கி வருகிறார். இன்று நடந்த போட்டியோடு சேர்த்து இதுவரை மூன்று போட்டிகளில் பிவி சிந்து ஆடியுள்ளார்.

மூன்றிலும் வரிசையாக வெற்றிபெற்று பிவி சிந்து ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பெரிய நம்பிக்கை கொடுத்துள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இன்று டென்மார்க்கின் மியாவை பிவி சிந்து எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் இருந்தே பிவி சிந்து ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். முதல் செட்டில் இரண்டாம் பாதியில் மியா கொஞ்சம் ஆதிக்கம் செலுத்தினார்.

முதல் செட்

முதல் செட்

ஆனாலும் உடனே மீண்டு வந்த பிவி சிந்து முதல் செட்டை அதிரடியாக 21- 15 என்ற புள்ளி கணக்கில் முடித்தார். இரண்டாவது செட்டிலும் சிந்துவின் ஆதிக்கம் தொடர்ந்தது. இரண்டாவது செட்டில் சிந்து தொடக்கத்தில் வேகமாக புள்ளிகளை எடுத்து வந்தார்.

 இரண்டாவது

இரண்டாவது

இதன் மூலம் இரண்டாவது செட்டையும் 21- 13 என்ற புள்ளி கணக்கில் சிந்து வென்றார். இதன் மூலம் டென்மார்க்கின் மியாவை வீழ்த்தி பிவி சிந்து 21- 15, 21- 13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் பிவி சிந்து காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

 முதல் போட்டி

முதல் போட்டி

ஒலிம்பிக்கின் முதல் போட்டியில் இஸ்ரேலின் க்செனியா பொலிகர்போவாவ 21-7, 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து வெற்றிபெற்றார். நேற்று நடந்த போட்டியில் ஹாங்காங்கின் சியான் நாங் இயை 21-9, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சிந்து வெற்றிபெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று வெற்றிபெற்று சிந்து நம்பிக்கை அளித்துள்ளார்.

Story first published: Thursday, July 29, 2021, 18:57 [IST]
Other articles published on Jul 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+