Tata steel chess India - கடைசி சுற்றில் பட்டையை கிளப்பிய பிரக்ஞானந்தா.. 3வது இடம் பிடித்து அசத்தல்
கொல்கத்தா : பாரம்பரியமிக்க டாட்டா ஸ்டீல் செஸ் இந்தியா தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
உலக கோப்பையில் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்ற நிலையில் தற்போது கொல்கத்தாவில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் இந்தியா தொடரில் மின்னல் வேக செஸ் போட்டியில் பங்கேற்றார்.

இந்த தொடரில் முதல்முறையாக இந்தியா வந்துள்ள பிரஞ்சு வீரர் மேக்சிமி அபாரமாக விளையாடினார்
இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா முதல் இரண்டு சுற்றில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். மேலும் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சக தமிழ்நாட்டு வீரரான குகேஷ் உடன் பலப்பரிட்சை நடத்திய பிரக்ஞானந்தா 38வது நகரத்தில் தோல்வியை தழுவினார்.

எனினும் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டியில் ராபிட் செஸ் போட்டியின் நடப்புச் சாம்பியனாக இருக்கும் அர்ஜுன் ஏரிகாசியை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா 39 ஆவது நகர்த்தலில் வீழ்த்தினார். இதன் மூலம் ஐந்து புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்தார்.
நட்சத்திர வீரரான பிரான்சிங் மேக்சிமி தொடர்ந்து அபாரமாக விளையாடி களமிறங்கிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். இதன் மூலம் 7 புள்ளிகள் உடன் மேக்ஸ்மி முதல் இடத்திலும் 5.5 புள்ளிகளுடன் அசர்பைஜான் வீரர் தோய்மர் இரண்டாவது இடத்திலும் மூன்றாம் இடத்தில் ஐந்து புள்ளிகள் உடன் பிரக்ஞானந்தா, குஜராத்தி மற்றும் அலெக்ஸாண்டர் ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications