Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பள்ளியில் டிஸ்மிஸ், 16 வயதிலேயே அப்பா.. கால்பந்தில் கலக்கும் இங்கிலாந்தின் ரஹீம் ஸ்டெர்லிங்

லண்டன்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணிக்காக கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் இளம் வயதிலேயே எவ்வளவு கெட்ட பெயர் எடுக்க வேண்டுமோ அவ்வளவு கெட்ட பெயரை சம்பாதித்தும் இருக்கிறார்.

ரஹீம் ஸ்டெர்லிங், ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். அவர் 5 வயதில் தனது தாயாருடன் இங்கிலாந்தில் குடியேறினார். வடமேற்கு லண்டனில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடம் ஒன்றில் ரஹீமை அவரது தாயார் சேர்த்துவிட்டார்.

Raheem Sterling - Bad boy who grew up to be our new hope!

ஆனால் அது சிறிது காலம்தான்.. அவரது நடவடிக்கைகள் மோசமாக இருந்ததால் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அப்போது அவரது ஆசிரியர் ஒருவர் சொன்ன வாசகம் இதுதானாம்..

ஜெயிலு அல்லது புட்பாலு

இது மாதிரி நடந்து கிட்ட.. 17 வயசிலேயே ஜெயில்ல இருப்ப.. இல்லைன்னா இங்கிலாந்து கால்பந்து அணிக்காக விளையாடி கிட்ட இருப்ப.." என்பதுதான்..

அடிதடி வழக்குகள்

அந்த ஆசிரியர் சொன்னபடியே, ரஹீம் ஜெயிலுக்குப் போவதற்கான வாய்ப்புகள் வந்தன.. பெண்கள் இருவரை தாக்கியதாக 2 வழக்குகள் போடப்பட்டன. ஆனால் போதுமான சாட்சியங்கள் இல்லாததால் தப்பிவிட்டார்.

16 வயதில் அப்பா..

இதில் மிக முக்கியமானது ரஹீமுக்கு இப்போது 2 வயதில் மகள் இருக்கிறார் என்பதும் கூட.. 16 வயதிலேயே ரஹீம் அப்பாவாகிவிட்டார்.

லிவர்பூல் அணி

இங்கிலாந்தின் லிவர்பூல் உள்ளூர் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார் ரஹீம்.

இங்கிலாந்து அணி

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் 16 வயதுக்குட்பட்டோர் அணி, 17 வயதுக்குட்பட்டோர் அணி, 21 வயதுக்குட்பட்டோர் அணிகளில் இடம் பிடித்தார். தற்போது இங்கிலாந்து நாட்டு அணிக்காக பிரேசிலில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பிரேசிலில் கலக்கல்

இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தின் போது இங்கிலாந்து ஒரு கோல் அடிக்க ரஹீம் ஸ்டெர்லிங்தான் காரணமாக இருந்தார். மிகவும் ஆக்ரோஷமாக பந்தை அவர் தட்டிச் செல்லும்போதும் பாஸ் செய்யும் போதும் லாவகமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் ரஹீம்.

நம்பிக்கை நட்சத்திரம்..

இப்போது இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ரஹீம் ஸ்டெர்லிங்.

Story first published: Monday, June 16, 2014, 19:20 [IST]
Other articles published on Jun 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+