Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செஸ் ஒலிம்பியாட் 2022.. ட்விட்டரில் ரஜினிகாந்த் கொடுத்த சர்ஃப்ரைஸ்.. வீரர், வீராங்கனைகள் உற்சாகம்!

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ள ட்வீட் சமூகவலைதளங்களை கலக்கி வருகிறது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாலை சென்னையில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகின்றன.

இன்று மாலை நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு போட்டியை தொடங்கி வைக்கவுள்ளனர்.

 செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த செஸ் திருவிழாவில் 189 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொள்ளவுள்ளனர். இந்தியாவின் சார்பில் 3 ஓபன் மற்றும் 3 மகளிர் என மொத்தமாக 6 குழுவில் இருந்து 30 பேர் தேர்வு விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 ரஜினி திடீர் சர்ஃப்ரைஸ்

ரஜினி திடீர் சர்ஃப்ரைஸ்

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் சர்ஃப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது செஸ் விளையாடுவது போன்ற தனது விண்டேஜ் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளளார். அந்த புகைப்படத்தில் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் செஸ் விளையாடுவது போன்று இடம்பிடித்துள்ளது.

வாழ்த்துக்குறிப்பு

வாழ்த்துக்குறிப்பு

மேலும் தனக்கு செஸ் எவ்வளவு பிடிக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார். உள் அரங்க போட்டிகளில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டு என்றால் அது செஸ் தான். அப்படிபட்ட போட்டியில் இன்று கலந்துக்கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்கள், கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கும் என வாழ்த்துக்கூறியுள்ளார்.

ரஜினியின் செஸ் காதல்

ரஜினியின் செஸ் காதல்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர பணிகளில் இருந்தே நடிகர் ரஜினிகாந்த்-ன் செஸ் காதலை நாம் பார்க்கலாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், முதல்வர் ஸ்டாலின் தோன்றியிருந்த செஸ் ஒலிம்பியாட்டின் டீசர் வீடியோவை ரஜினிகாந்த் தான் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 28, 2022, 12:48 [IST]
Other articles published on Jul 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+