Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெள்ளை சூட்டில் முதல்வர் ஸ்டாலின்.. ரஜினிகாந்த் கொடுத்த சர்ஃபைஸ்.. செஸ் ஒலிம்பியாட் டீசர் வெளியானது

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நடைபெற்று வரும் சதுரங்க போட்டிகளில் செஸ் ஒலிம்பியாட் என்ற போட்டியின் மிகவும் புகழ்பெற்ற ஒன்று.

2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரானது, செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு ஒரு ஒலிம்பிக் திருவிழா போன்று இருந்து வருகிறது.

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

ரஷ்யாவில் நடைபெறவிருந்த நடப்பாண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் போர் காரணமாக இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. இதனை தொகுத்து வழங்கும் உரிமையை தமிழகம் பெற்று, சென்னை மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

டீசர் வெளியானது

டீசர் வெளியானது

இந்த தொடருக்கான சின்னம் மற்றும் ஜோதி சமீபத்தில் ஏற்பட்ட நிலையில், இன்று அதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூலை 17) இரவு 7.30 மணிக்கு வெளியிடுவதாக இருந்தது. ஆனால் தாமதாக இரவு 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

முதல்வர் வரவேற்பு

முதல்வர் வரவேற்பு

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் "வெல்கம் டூ சென்னை" என்ற வரிகளால் இந்த டீசர் வீடியோ உருவாகியுள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளை நிற சூட்டில் வீரர்களை வரவேற்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மானும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார்.

பிரமாண்ட போட்டி

இந்த போட்டியில் கலந்துக்கொள்ள மொத்தம் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,000 வீரர்கள் வரை சென்னைக்கு வருகை தரவுள்ளனர். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 5 வீரர், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவாக வருகை தருவார்கள். இதில் இந்தியா தொகுத்து நடத்தும் நாடு என்பதால் 2 குழுக்கள் பங்கு பெறும். இதற்கான பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Story first published: Friday, July 15, 2022, 21:23 [IST]
Other articles published on Jul 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+