Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்.. பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?

டெல்லி: விளையாட்டு துறையில் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் சார்பில் உயரிய விருதாக ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான விருதுகளுக்கும் ஏற்கனவே ஒவ்வொரு விளையாட்டு போட்டிகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.

 விருதின் பெயர் மாற்றம்

விருதின் பெயர் மாற்றம்

அதாவது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வரும் கேல் ரத்னா விருது, இனி இந்தியாவின் தலைசிறந்த ஹாக்கி வீரரான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி இந்தியா முழுவதும் இருந்து எனக்கு கேல் ரத்னா விருதுக்கு அடுத்ததாக தயான் சந்த் பெயரை சூட்ட வேண்டும் எனக்கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ராஜீவ் காந்தி கேல் ரத்னா, இனி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என அழைக்கப்படும்.

பெருமைப்படும் பிரதமர்

பெருமைப்படும் பிரதமர்

இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் தயான் சந்த் முக்கியமானவர். நமது நாட்டிற்காக பல்வேறு பெருமைகளையும், கோப்பைகளையும் கொண்டு வந்தவர். நம் நாட்டில் விளையாட்டு துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருதுக்கு அவரின் பெயரை சூட்டுவதில் பெருமை கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

கேல் ரத்னா வரலாறு

கேல் ரத்னா வரலாறு

விளையாட்டு துறைக்காக கேல் ரத்னா விருதுகள் கடந்த 1991 - 1992 காலக்கட்டம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருதினை, இந்தியாவின் சதுரங்கப்போட்டி ( செஸ்) ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த்-க்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை, கோபிசந்த், அபிநவ் பிந்த்ரா, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் போன்ற பல முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

தயான் சந்த் யார்?

தயான் சந்த் யார்?

இப்படிபட்ட புகழ்பெற்ற விருதுக்கு தற்போது தயான் சந்த்-ன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அலகாபாத்தை சேர்ந்தவரான தயான் சந்த்-ன் இந்தியாவுக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தலைசிறந்த ஹாக்கி வீரர் ஆவார். கடந்த 1926ம் ஆண்டு முதல் 1949ம் ஆண்டு வரை இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடியுள்ள தயான் சந்த், 400க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து அசத்தியவர். ஒலிம்பிக்கில் இந்திய அணி இதுவரை 12 முறை பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 1928, 1932, 1936ம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் இந்த தயான் சந்த.

மற்ற பெருமைகள்

மற்ற பெருமைகள்

தயான் சந்த்-ஐ விளையாட்டு துறையில் பெருமைப்படுத்துவது இது முதல் முறை அல்ல. இந்தியாவில் விளையாட்டு துறையில் சிறந்த பங்காற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அது தயான் சந்த்-ன் பெயரில் தான் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள தேசிய மைதானத்திற்கு கடந்த 2002ம் ஆண்டு தயான் சந்த் தேசிய மைதானம் என பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 6, 2021, 21:01 [IST]
Other articles published on Aug 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+