திருமாவளவன் முடிவு வரவேற்கத்தக்கது: ராமதாஸ்
திண்டிவனம்:
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள திருமாவளவனின் முடிவு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தவேண்டியதற்கான ஆணையை உடனடியாக அரசு பிறப்பிக்க வேணடும்.
இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதிஅறிவித்திருக்கிறார். இதற்கு உள்ளாட்சிமன்றத் தேர்தல் நடந்து முடிகிற வரையில் காத்திருக்க தேவையில்லை.உடனடியாக சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
கேரள அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்ததை நடத்துவதில் எந்த பலனும் இல்லை. பேச்சு வார்த்தைநடத்துவது என்பது கால தாமதம் செய்யும் நாடகம், இந்த நாடகத்தில் நாம் ஏமாந்து விடக்கூடாது.
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை ஒரே தவணையில் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களதுகோரிக்கை. இதில் திமுக உள்ளிட்ட கட்சிகள் உறுதியான நிலையை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டணி கட்சிகளை ஜெயலலிதா என்றைக்கும் மதித்ததில்லை. அவருடன் கூட்டணி சேரும் கட்சிகள்தன்மானத்துடன் அங்கே நீடிக்க முடியாது என்பதற்கு உதரணமாக விடுதலை சிறுத்தைகள் அக்கட்சிகூட்டணியிலிருந்து விலகி வந்திருப்பது காட்டுகிறது.
விடுதலை சிறுத்தைகளின் இந்த முடிவு தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது. கருணாநிதி தேர்தல்வாக்குறுதிகளை 100 நாட்களில் நிறைவேற்றி மேலும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் செய்ய முடியும்.
வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த பகுதியில் உள்ள கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பேசி சரி செய்துகொள்வார்கள். உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு போவது குறித்து பின்னர் அறிவிப்பேன். வைகோ அதிமுககூட்டணியில் இருந்து விலக வேண்டுகோள் விடுக்க மாட்டேன்.
ஊராட்சி தலைவர் ஏலம் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புதுச்சேரி ஜிப்மரில் சில சக்திகள், சுயநலவாதிகள் துண்டுதலின் பேரில் நோயாளிகளுக்கு எதிரான விரோதபோக்கை கடைப்பிடக்கிறார்கள். மனித நேயமில்லாத இந்த செயலுக்கு மன்னிப்பே கிடையாது. இதைத் தான்ஜிப்மர் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். ஜிப்மர் தன்னாட்சி பெற்றால் பல கோடி நன்மைகள் கிடைக்கும்என்றார் ராமதாஸ்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:49 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications