கால்பந்து ஜாம்பவான் ஆல்பிரெடோ மாரடைப்பால் சாவு
லண்டன்: கால்பந்தாட்ட ஜாம்பவான் ஆல்ஃபிரெடோ டி ஸ்டெபேனோ மரணமடைந்தார், அவருக்கு வயது 88.

இத்தாலி நாட்டை சேர்ந்தவரான ஆல்ஃபிரெடோ, ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்புக்காக விளையாட ஆரம்பித்த பிறகு உலக பிரசித்தம் ஆனார். ஐந்து முறை தொடர்ந்து அந்த அணி ஐரோப்பிய கோப்பையை வாங்குவதற்கு காரணமாக இருந்தவர் ஆல்ஃபிரெடோதான். மேலும் அர்ஜெண்டினா, கொலம்பியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாட்டு அணிகளுக்காகவும் அந்தந்த நாடுகளின் குடியுரிமையை பெற்று விளையாடிய அனுபவம் இவருக்கு உள்ளது.

முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே ஆல்ஃபிரேடோ பற்றி கூறுகையில், உலகில் பீலே, மரடோனா ஆகியோரைத்தான் சிறந்த வீரர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கு தகுதியானவர்களில் ஒருவர் ஆல்ஃபிரேடோ என்று புகழ்ந்துரைத்திருந்தார். இந்நிலையில், 88 வயதான ஆல்ஃபிரெடோ மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது குடும்பத்துக்கு உலகம் முழுவதிலுமிருந்து அஞ்சலி குவிந்துகொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications