Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திட்டு வாங்கினாலும் பரவாயில்லை.. எங்களுக்கு இதுதான் வேணும்.. மிகப் பெரிய டகால்ட்டி வேலை பார்த்த WWE!

நியூயார்க் : WWE நிகழ்ச்சிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் பார்த்து வருகிறார்கள்.

Recommended Video

Reason behind Jeff Hardy arrest in Smackdown episode

அப்படி இருக்கும் போது தங்கள் ரெஸ்லிங் வீரர் ஒருவர் காவல்துறையால் அடிக்கடி கைது செய்யப்பட்டவர் என்பதை விரும்புவார்களா?

அதை அடியோடு மாற்ற ஒரு டகால்ட்டி வேலை செய்துள்ளதாக பரபரப்பாக கூறப்படுகிறது.

ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் கைது

ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் கைது

பிரபல ரெஸ்லிங் வீரர் ஜெப் ஹார்டி கடந்த ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்டார். அது நாடகம் தான். ஆனால், அது உண்மையா, பொய்யா? எனத் தெரியாமல் அனைவரும் அதைப் பற்றி பேசத் துவங்க அந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவியது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

எலியாஸ் என்ற வீரரை காரை ஏற்றி காயப்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் மது அருந்தி இருந்ததாகவும் கூறப்பட்டது. இது அனைத்துமே நாடகம் தான். ஸ்மாக்டவுன் தொடர் முடியும் முன்பே ஜெப் ஹார்டி மீண்டும் அரங்கிற்குள் வந்து மற்றொரு வீரருடன் மோதினார்.

புகார்

புகார்

ஜெப் ஹார்டி கடந்த ஆண்டு இரண்டு முறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ஸ்மாக்டவுனில் நடந்த நிகழ்வை கண்ட ரசிகர்கள், ஜெப் ஹார்டியின் நிஜ வாழ்க்கையை வைத்து சம்பவங்களை சித்தரித்து WWE பரபரப்பை உண்டாக்கி காசாக்கி உள்ளது என புகார் கூறினர்.

தில்லாலங்கடி வேலை

தில்லாலங்கடி வேலை

ஆனால், இதன் பின்னணியில் இன்னும் பெரிய தில்லாலங்கடி வேலை செய்தது அம்பலம் ஆனது. ஜெப் ஹார்டி கைது என முன்பு கூகுளில் தேடினால் அவர் இதுவரை கைது செய்யப்பட்ட சம்பவங்கள் வரிசையாக வரும்.

தடையாக இருந்தது

தடையாக இருந்தது

அதனால், அடிக்கடி போதை விவகாரங்களில் தங்கள் ரெஸ்லிங் வீரர் கைது ஆனவர் என்ற விஷயம் அவரை வைத்து பெரிய போட்டிகளை நடத்த WWEக்கு தடையாக இருந்தது. அதை மாற்றவே கைது நாடகத்தை அரங்கேற்றி உள்ளது.

கூகுளில் தேடினால்..

கூகுளில் தேடினால்..

இப்போது கூகுளில் ஜெப் ஹார்டி கைது என தேடினால் அவர் ஸ்மாக்டவுனில் கைது செய்யப்பட்டது தான் முதல் செய்தியாக வருகிறது. மேலும், யூட்யூப் உள்ளிட்ட தளங்களிலும் ஸ்மாக்டவுன் கைது தான் முதலில் இடம் பெறுகிறது.

கைது சம்பவங்களை மறைக்க முயற்சி

கைது சம்பவங்களை மறைக்க முயற்சி

இதன் மூலம், ரெஸ்லிங் நிகழ்ச்சியில் போலியாக ஜெப் ஹார்டி கைது செய்யப்பட்டார் என இணையத்தில் காட்டி, அவரது உண்மையான கைது சம்பவங்களை மறைக்க WWE முயன்றுள்ளது என்கிறார்கள் சிலர். இது மிகப் பெரிய பித்தலாட்டம் தான்.

 WWE சக்தி

WWE சக்தி

ஆனால், WWE மிகப் பெரிய சக்தி வாய்ந்த நிறுவனமாக விளங்குகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் போது ஒரு நிகழ்ச்சி கூட ரத்து செய்யவில்லை. ரசிகர்கள் இல்லாத அரங்கில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. இடையே, WWE போட்டிகளை அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் கூட சேர்த்து மிரள வைத்தது.

என்ன பார்க்க வேண்டும்?

என்ன பார்க்க வேண்டும்?

இத்தனை சக்தி வாய்ந்த நிறுவனம் கூகுளில் மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதை கூட தீர்மானிக்க முடியும் என்பதே உண்மை. ரெஸ்லிங்கில் மட்டுமல்ல, வேறு வகையிலும் இணையத்தில் நாம் என்ன பார்க்க வேண்டும் என யாரோ ஒருவர் தீர்மானிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதே நிதர்சனம்.

Story first published: Thursday, June 4, 2020, 19:51 [IST]
Other articles published on Jun 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+