Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிலைமை சரியில்லை.. கொரோனா வேற பயமுறுத்துது.. 83ஐ தள்ளி வைத்த ரன்வீர் சிங்

மும்பை: இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 83 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தின் நாயகனும், நடிகருமான ரன்வீர் சிங் அறிவித்துள்ளார்.

முன்னதாக இந்தப் படத்தை ஏப்ரல் 10ம் தேதி திரையிடத் திட்டமிட்டிருந்தனர். அதை தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிப்போட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பல்வேறு துறைகளும் இதனால் முடங்கிப் போயுள்ளன. விளையாட்டு உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. அதேபோல திரைத் துறையும் கூட ஸ்தம்பித்துள்ளது. இந்த நிலையில் 83 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

டிவீட் போட்ட ரன்வீர் சிங்

இதுதொடர்பாக படத்தின் நாயகன் ரன்வீர் சிங் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் ரிலீஸை தள்ளி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார். முன்னாள் கேப்டன் கபில் தேவின் கதை இது. கபில் தேவ் தலைமையில் இந்திய அணி 1983ம் ஆண்டு அபாரமாக தனது முதல் உலகக் கோப்பையை வென்று வந்தது. அதுதான் இந்தப் படத்தின் கதையாகும்.

ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்த ஜீவா

ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்த ஜீவா

இப்படத்தில் நம்ம ஊர் நடிகர் ஜீவா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், திரை ரசிகர்களும் இப்படத்துக்காக காத்துள்ளனர். ஆனால் தற்போது இப்படம் தள்ளிப் போயுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

கபில் தேவ் தலைமையில் சாம்பியன்

கபில் தேவ் தலைமையில் சாம்பியன்

1983ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதின. இதில் இந்தியா 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் கபில் தேவ் தலைமையில் அபாரமாக ஆடி 140 ரன்களில் வீழ்த்தி வரலாறு படைத்தனர்.

கொரோனாவால் ரிலீஸ் தள்ளி வைப்பு

கொரோனாவால் ரிலீஸ் தள்ளி வைப்பு

இதைத்தான் இப்படத்தின் கதையாக வைத்துள்ளனர். இப்படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங்கும், அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும் நடித்துள்ளனர். எல்லாம் முடிந்து படம் ரிலீஸுக்குத் தயாராகி வந்த நிலையில் கொரோனா வந்து விட்டது. இதனால் படத்தை ஒத்திப் போடுவதாக இன்று அறிவித்தார் ரன்வீர் சிங். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், 83 ஒரு படம் மட்டுமல்ல.. நாட்டின் தேசிய திரைப்படம். நாட்டின் நலமும், வளமும்தான் முதலில் முக்கியம். அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள். பத்திரமாக இருங்கள். விரைவில் வருகிறோம் என்று கூறியுள்ளார் ரன்வீர் சிங்.

Story first published: Friday, March 20, 2020, 13:26 [IST]
Other articles published on Mar 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+