ரியோ ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அட்டானு தாஸ் போராடி தோல்வி!
ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் வில்வித்தை போட்டியில் கொரிய வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார் இந்திய வீரர் அடானு தாஸ்.
ரியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை தனிநபர் பிரிவில் பங்கேற்றுள்ள அடானு தாஸ், தரநிலை சுற்று போட்டியில் 5வது இடம் பிடித்தார். முதல் சுற்றில் நேபாள வீரர் ஜிட்பகதூர் முக்தனை வீழ்த்தி வெற்றி கண்டார்.

பின்னர் நடந்த அடுத்த சுற்று போட்டியில் கியூபா வீரரை எதிர்கொண்டு அதிலும் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று நடந்த காலியிறுதிக்கு முந்தைய போட்டியில் கொரிய வீரர் சேதுங்கியுந் லீயுடன் மோதினார். இந்த போட்டியில் 4-6 என்ற கணக்கில் அட்டானு தாஸ் போராடி தோல்வியடைந்தார்.
இதன் மூலம், அட்டானு தாஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து வெளியேறினார். இந்த தோல்வியால் வில்வித்தையில் இந்தியாவின் பதக்கக் கனவு மீண்டும் ஒருமுறை தகர்ந்துள்ளது.
Story first published: Friday, August 12, 2016, 19:16 [IST]
Other articles published on Aug 12, 2016


Click it and Unblock the Notifications