ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸ் துடுப்பு படகு 1,500 மீட்டர் பிரிவில் இந்தியாவின் தத்து போக்கனால் காலிறுதியில் 4-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
முன்னதாக நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில் போக்கனால் 3-வது இடத்தைப் பிடித்து காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், இன்று 4 பிரிவுகளாக காலிறுதி சுற்றுகள் நடைபெற்றன.

இதில் பந்தய தூரத்தை 6 நிமிடம் 59 வினாடிகளில் கடந்த போக்கனால் தாம் பங்கேற்ற காலிறுதி சுற்றில் 4-வது இடத்தையே பிடித்தார். முதல் 3-இடங்களில் இடம் பிடித்தால் மட்டுமே அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க முடியும் என்பதால் போக்கனால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
4 பிரிவுகளில் நடைபெற்ற இந்த காலிறுதியில் ஒட்டுமொத்தமாக போக்கனால் 15-வது இடத்தைப் பிடித்துள்ளார்