Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோவில் பரபரப்பு: ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை பாக்கெட்டுகள் பறிமுதல்

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள ரியோவின் மரக்காணா மைதானத்தின் அருகிலேயே ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட கோகையின் பாக்கெட்டுகளை ரியோ போலீஸ் பிடித்துள்ளது. கைப்பற்றப்பட்ட 93 பாக்கெட்டுகளிலும் ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்டிருப்பதாக ரியோ நகர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் அமெரிக்கக் கண்டத்தில் ஒலிம்பிக் போட்டியை நடத்தப் போகும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது ரியோ டி ஜெனிரோ. ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் 2வது மிகப் பெரிய நகரம். சுமார் 70 லட்சம் மக்கள் தொகைக் கொண்டது.

உலகின் 207 நாடுகளில் இருந்து 17 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றனர். சுமார் 25 ஆயிரம் விளையாட்டு பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதிலுமிருந்து போட்டியை கவரேஜ் செய்ய ரியோ வரவுள்ளனர்.

15 லட்சம் சுற்றுலாப்பயணிகள் பிரேசிலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் கிராமத்தில் 3,604 அடுக்குமாடி குடியிருப்புகள் எழுப்பப்பட்டுள்ளன. காண்டம்கள் கூட லட்சக்கணக்கில் வாங்கி வைத்து ஒரு நாளைக்கு 2 என வழங்க ஒலிம்பிக் போட்டி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

ரியோவில் போதை கும்பல்

ரியோவில் போதை கும்பல்

ரியோ ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் சின்னத்தையே கோகையின் பாக்கெட்டுகளில் அச்சடித்து, போதை மருந்து கும்பல் விற்பனை செய்வது பிரேசில் அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் சின்னத்துடன் போதை பாக்கெட்

ஒலிம்பிக் சின்னத்துடன் போதை பாக்கெட்

ஒலிம்பிக் போட்டியின் அடையாளமே அதன் சின்னம்தான். அன்பையும் சமதானத்தையும் வலியுறுத்தியும் 5 கண்டங்களையும் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் பின்னி பிணைந்திருப்பது போல ஒலிம்பிக் சின்னம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

93 கோகையின் பாக்கெட்டுகள்

93 கோகையின் பாக்கெட்டுகள்

ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள மரக்காணா மைதானத்தின் அருகிலேயே ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட கோகையின் பாக்கெட்டுகளை ரியோ போலீஸ் பிடித்துள்ளது. கைப்பற்றப்பட்ட 93 பாக்கெட்டுகளிலும் ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கை வாசகம்

எச்சரிக்கை வாசகம்

எந்த ஒரு ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலும் இப்படி ஒரு அவலம் நிகழ்ந்தது இல்லை. ஆனால் ஒரு நல்ல விஷயத்தை அந்த பாக்கெட்டில் போதை கும்பல் செய்திருக்கிறது. 'குழந்தைகளிடம் இருந்து இந்த பாக்கெட்டுகளைத் தள்ளி வையுங்கள்' என்ற வாசகத்தை மறக்காமல் பாக்கெட் மீது அச்சடித்திருக்கிறதாம்.

போலீஸ் தீவிர சோதனை

போலீஸ் தீவிர சோதனை

ரியோ நகரம் முழுவதும் பரவலாக ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படலாம் போலீஸ் சந்தேகிக்கிறது. ஒலிம்பிக் சின்னம் பதிக்கப்பட்ட கோகையின் பாக்கெட்டுகளை பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Story first published: Thursday, July 28, 2016, 16:27 [IST]
Other articles published on Jul 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+