ரியோ ஒலிம்பிக்... 2வது நாளில் இந்தியா.. கை கொடுக்குமா ஹாக்கியும், வில்வித்தையும்?
ரியோ டி ஜெனீரோ: ரியோ டி ஜெனீரோவில் தொடங்கியுள்ள ஒலிம்பிக் போட்டியில் முதல் நாளில் இந்தியாவுக்குப் பெரிய அளவில் அதிர்ஷ்டம் இல்லை. பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் இன்று 2வது நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இரண்டாவது நாளில் இந்தியா பங்கேற்கவுள்ள போட்டிகள் குறித்த ஒரு பார்வை:

துப்பாக்கிச் சுடுதல்
மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்று. இந்தியாவின் ஹீனா சித்து கலந்து கொள்கிறார். இவர் 2013 உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்றவர்.
ஆடவர் டிராப் பிரிவில் தகுதிச் சுற்று. மனவ்ஜித் சந்து, கியானன் செனாய் பங்கேற்கிறார்கள்.
மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றுப் போட்டி இரவு ஏழரை மணிக்கு நடைபெறுகிறது.
வில்வித்தை
மகளிர் குழு 1/8 எலிமினேஷன் பிரிவு - இந்தியா - கொலம்பியா மோதல். இந்திய அணியில் தீபிகா குமாரி, பாம்பாய்லோ தேவி, லட்சுமி ராணி மஜி இடம் பெற்றுள்ளனர். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நாளை அதிகாலை 1.09 மணிக்கும், தங்கப் பதக்கத்திற்கான போட்டி 1.37 மணிக்கும் நடைபெறும்.
ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்
மகளிர் தகுதிச் சுற்று. சப் டிவிஷன் 2. இந்தியாவின் தீபா கர்மகர் கலந்து கொள்கிறார்.
ஹாக்கி
மகளிர் ஹாக்கி அணி இன்று தனது முதல் போட்டியில் ஜப்பானை சந்திக்கிறது. 36 வருடத்திற்குப் பிறகு இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றில் நேரடியாக காணலாம்.


Click it and Unblock the Notifications