For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எங்க ஏரியா, உள்ளே வராதே.... இஸ்ரேல் வீரர்களை பஸ்சில் ஏற விடாமல் தடுத்து விரட்டிய லெபனான் வீரர்கள்!

ரியோ டி ஜெனீரோ: ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு செல்லும் பேருந்தில் ஏறுவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனான் விளையாட்டுக் குழுக்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

கடைசி வரை இஸ்ரேல் வீரர்களை தங்களது பேருந்தில் ஏறுவதற்கு லெபனான் வீரர்கள் விடவே இல்லையாம். இதனால் இஸ்ரேல் தரப்பு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

கடைசியில் அந்தப் பேருந்தில் லெபனான் விளையாட்டுக் குழுவினர் மட்டுமே பயணித்து தொடக்க விழா நடந்த மரக்கானா ஸ்டேடியத்திற்குப் போயினராம். எதனால் இந்த மோதல் என்ற விவரம் வெளியாகவில்லை. ஆனால் இஸ்ரேலுடன் லெபனான் வீரர்கள் மோதியதற்கான காரணத்தை தனியாக விளக்கத் தேவையில்லை.

இஸ்ரேலியர்களுக்குத் தனி பேருந்து

இஸ்ரேலியர்களுக்குத் தனி பேருந்து

இந்த மோதலைத் தொடர்ந்து இஸ்ரேல் குழுவினர் பயணம் செய்ய தனியாக ஒரு பேருந்தை போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து கொடுத்து நிலைமையை சமாளித்தனர் என்று இஸ்ரேல் குழுவின் தலைவரான கிலி லஸ்டிங் தெரிவித்தார்.

லெபனான் குழு தலைவர் மீது குற்றச்சாட்டு

லெபனான் குழு தலைவர் மீது குற்றச்சாட்டு

லஸ்டிங் மேலும் கூறுகையில், லெபனான் குழுத் தலைவரான சலீம் ஹஜ் நிகோலா, கையை வைத்து எங்களது வீரர்கள் பஸ்சில் ஏறுவதைத் தடுத்தார். லெபனான் குழுவினரின் செய்கை நிச்சயம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றார்.

நியாயப்படுத்தும் லெபனான்

நியாயப்படுத்தும் லெபனான்

லெபனான் குழு தலைவர் சலீம் கூறுகையில், அது எங்களுக்காக ஒதுக்கப்பட்ட பேருந்து. அதில் மற்றவர்கள் ஏறுவதை எப்படி அனுமதிக்க முடியும். பிறகு எங்களது வீரர்கள் எங்கு உட்காருவார்கள். எனவேதான் இஸ்ரேல் வீரர்களைத் தடுத்தோம். இஸ்ரேல் வீரர்களில் பலர் நாங்கள் கூறியதை ஏற்றுக் கொண்டனர். சிலர்தான் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றார்.

ஊர்ப் பஞ்சாயத்து!

ஊர்ப் பஞ்சாயத்து!

இஸ்ரேல் - லெபனான் இடையிலான கசப்புணர்வும், மோதலும் உலகம் அறிந்ததுதான். லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா போராளிகளுடன் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் மோதி வருகிறது. கடந்த 2006ல் நடந்த பெரும் மோதலின்போது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 1200க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 7, 2016, 12:05 [IST]
Other articles published on Aug 7, 2016
English summary
The Israeli and Lebanese Olympics teams became involved in a heated argument about access to a bus to the opening ceremony of the Rio de Janeiro Games.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+