என் தம்பி ஒலிம்பிக்கில் கலக்குறானே.. டிவிட்டரில் பெருமைப்பட்ட மிட்சல் ஸ்டார்க்
பெங்களூரு: ஆஸ்திரேலியே வேகப் பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கின் தம்பி பிரன்டன் ஸ்டார்க், ஒலிம்பிக்கில் கலக்கி வருகிறார். இதுகுறித்து டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மிட்சல் ஸ்டார்க்.
பிரன்டன் ஸ்டார்க், ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதை டிவிட்டரில் கூறி பெருமைப்பட்டுள்ளார் மிட்சல் ஸ்டார்க்.
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணத்தில் உள்ளது. டெஸ்ட் தொடரை அது இலங்கையிடம் இழந்துள்ளது. இந்த நிலையில் மிட்சல் ஸ்டார்க்கின் தம்பி மூலம் ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது.

தகுதிச் சுற்றில் 10வது இடம்
உயரம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்றில் பிரன்டன் ஸ்டார்க் 2.29 மீட்டர் உயரம் தாண்டி 10வது இடத்தைப் பிடித்தார். 3வது மற்றும் இறுதி வாய்ப்பில் இந்த உயரத்தை அவர் எட்டினார்.
2 செமீ கம்மிதான்
இருப்பினும் இவர் வழக்கமாக தாண்டும் உயரத்தை விட இது 2 செமீ குறைவாகும். கடந்த 2014 காமன்வெல்த் போட்டியில் 2.31 செமீ உயரம் அவர் தாண்டியிருந்தார்.
தம்பியை வாழ்த்திய அண்ணன்
தம்பி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுளதற்கு மிட்சல் ஸ்டார்க் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில், தம்பிக்காக மகிழ்ச்சி அடைகிறேன். பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இறுதிப் போட்டியில் அசத்துவேன்
பிரன்டன் ஸ்டார்க்கும் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டியில் இன்னும் சிறப்பாக செயல்படப் போவதாகவும், தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
