For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபிகா குமாரி, பொம்பைலா தேவி "அவுட்".. வில்வித்தையில் இந்தியாவின் கனவு காலி!

ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக், மகளிர் தனி நபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரியும், பொம்பைலா தேவியும் அடுத்தடுத்து தத்தமது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியைச் சந்தித்து வெளியேறினர். இதன் மூலம் இந்தியாவின் பதக்கக் கனவு இப்பிரிவில் முடிவுக்கு வந்தது.

காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி, சீனத் தைபேயின் யா டிங் டான் ஆகியோர் மோதினர். இதில் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார் தீபிகா குமாரி.

 Deepika Kumari

யா டிங் டான் சிறப்பாக செயல்பட்டு தீபிகா குமாரியை செயலிழக்க வைத்து விட்டார். இந்தத் தோல்வியின் மூலம் இப்பிரிவில் இந்தியாவின் பதக்கக் கனவு பறிபோனது.

இன்னொரு காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பொம்பைலா தேவி மோதினார். பொம்பைலா தேவி சற்று சிறப்பாக விளையாடினார் என்றுதான் சொல்ல வேண்டும். 2 செட்களை அவர் கைப்பற்றினார். ஆனால் அவரை எதிர்த்து மோதிய மெக்ஸிகோவின் அலெக்சாண்ட்ரா வெலன்சியா 6 செட்களைக் கைப்பற்றி வெற்றி பெற்று விட்டார்.

Bombayla Devi

இந்த இரு தோல்வியின் மூலம் இப்பிரிவில் இந்தியாவின் பதக்கக் கனவு தகர்ந்து போய் விட்டது.

Story first published: Thursday, August 11, 2016, 18:20 [IST]
Other articles published on Aug 11, 2016
English summary
India's Deepika Kumari failed to make the quarter-finals in the women's individual archery event at Rio Olympics 2016. Olympics special site; Photo gallery On Thursday (August 11), Deepika lost 0-6 to Chinese Taipei's Ya-Ting Tan in the pre-quarterfinals.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+