ரியோ ஒலிம்பிக்: ஜிம்னாஸ்டிக்ஸில் திபா கர்மாகர் அசத்தல்.. இறுதிப் போட்டியில் நுழைந்தார்!
ரியோ: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று போட்டியில் பங்குபெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் திபா கர்மாகர் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு ஜிம்னாஸ்டிக் மூலம் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் கோட்டிகள் நடைபெற்று வருகின்றன.ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் திபா கர்மாகர் நான்கு வகையான ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகளை பெற்று 27வது இடத்தை பிடித்துள்ளார். வால்ட் பிரிவில் 14.850 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்தார்.
அன் ஈவன் பார் பிரிவில் 11.666 புள்ளிகள், பேலண்ஸ் பீம் பிரிவில் 12.866 புள்ளிகள், ஃப்ளோர் பிரிவில் 12.033 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் மூலம் 11ம் தேதி நடைபெறும் ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்
ஜிம்னாஸ்டிக்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள திபா கர்மாகர் ஒலிம்பிக்கில் பங்கேற்று முதல் இந்திய ஜிம்னாஸ்ட் என்ற சாதனையை படைத்தார்.

பதக்க நாயகி
ஜிம்னாஸ்டிக்கில் திபா கர்மாகர் குவித்துள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 77. இதில் 67 தங்கப்பதக்கங்களும் அடங்கும். 2014ல் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று ஜிம்னாஸ்டிக்கில் இந்தியாவின் கொடியை பறக்கவிட்டார்.

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிடைத்த பதக்கம் அவரது நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றதுடன், சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு வழங்கும், ‘உலகத் தரம்வாய்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற சான்றிதழையும் பெற்றுள்ளார்.

கடினமான ஜிம்னாஸ்டிக்
விளையாட்டுகளிலேயே மிகவும் கடினமானது ஜிம்னாஸ்டிக். இதில் திபா அதிகம் கலந்துகொள்வது ப்ராடுனோவா வால்ட் என்னும் பிரிவில் தான். வேகமாக ஓடிவந்து ஒரு திண்டின் மீது கைகளை வைத்து உயரே எழும்பி சம்மர் சால்ட்களை அடித்தவாறே தரையைத் தொடுவதுதான் இந்த போட்டியின் சிறப்பம்சம்.

ஆபத்தான விளையாட்டு
சம்மர் சால்ட்களை அடித்தவாறு தரையை நோக்கி வரும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் பிசகினாலும் தலையில் அடிபட வாய்ப்புள்ளது. தவறுதலாக விழுந்தால் கை, கால்கள் செயலற்று போய்விடும்
ஒலிம்பிக் பதக்கம்
இத்தகைய கடினமான விளை யாட்டை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு, பதிலளித்த திபா, ஒவ்வொரு வெற் றிக்கு பின்னாலும் ஓர் ஆபத்து இருக் கிறது. நாம் ரிஸ்க் எடுத்து செயல்பட்டால் தான் வெற்றிகளை குவிக்கமுடியும் என்று கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் திபா கர்மாகர், இறுதிப் போட்டியில் நுழைந்தன் மூலம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் பதக்கம் வென்று புதிய சாதனையை நிகழ்த்த வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications