Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகே... உல்லாசத்திற்கு அழைக்கும் சிறுமிகள்.. பரபரக்கும் விபச்சாரம்!

ரியோ டி ஜெனீரோ: ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டிகளை வைத்து தற்போது விபச்சாரம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சிறுமிகள் அதிக அளவில் விபச்சாரத்தில் ஈடுபடுவதை பலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது.

ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகே சிறுமிகள் பலர் விபச்சாரத்திற்காக காத்திருப்பது மனித உரிமை ஆர்வலர்களை குறிப்பாக சிறார் நல விரும்பிகளை கவலை கொள்ள வைப்பதாக உள்ளது. அப்பகுதியில் வீடுகளிலும் சிறுமிகளை வைத்து பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனராம்.

9 வயது சிறுமிகள் கூட விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒலிம்பிக் கிராமத்திற்கு வெகு அருகேயே இந்த விபச்சாரம் களை கட்டியுள்ளது.

நெடுஞ்சாலையில்

நெடுஞ்சாலையில்

ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகே உள்ள நெடுஞ்சாலைதான் இந்த விபச்சாரத் தொழிலின் தலைமையகம் போல காணப்படுகிறது. இங்கு வந்தால் ஏராளமான பெண்களை குறிப்பாக சிறுமிகளை பார்க்கலாம். அத்தனை பேரும் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள்தான்.

ஒரு மணி நேர தூரத்தில்

ஒரு மணி நேர தூரத்தில்

இந்த சாலையானது, ஒலிம்பிக் கிராமத்திலிருந்து சரியாக 50 நிமிட தூரத்தில் உள்ளது. 9 வயது சிறுமி முதல் பெரிய பெண்கள் வரை இங்கு விபச்சாரத்திற்காக காத்துள்ளனர். வழக்கமாக இவர்கள் லாரி டிரைவர்களைத்தான் குறி வைப்பார்கள். தற்போது ஒலிம்பிக் களை கட்டியிருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும் வலை விரிக்கின்றனர்.

ஜொலிக்கும் ஸ்டேடியங்களுக்குப் பக்கத்தில்

ஜொலிக்கும் ஸ்டேடியங்களுக்குப் பக்கத்தில்

இங்கிருந்து பார்த்தால் புத்தம் புதிதாக கட்டப்பட்ட ஸ்டேடியங்கள் பளிச்சென ஜொலிக்கின்றன. ஆனால் இந்த சிறுமிகள், பெண்களின் வாழ்க்கைதான் விபச்சாரம் என்ற இருட்டில் அடைந்து கிடக்கிறது.

பிஆர் 116

பிஆர் 116

பிஆர் 116 இது அந்த நெடுஞ்சாலையின் பெயர். பிரேசலின் மிக நீளமான நெடுஞ்சாலை. தலைநகர் ரியோவிலிருந்து பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரான சாவோ பாலோ வரை நீண்டு கிடக்கிறது இந்த சாலை. மொத்த நீளம் 4600 கிலோமீட்டர் ஆகும்.

மரணச் சாலை

மரணச் சாலை

இந்த சாலைக்கு மரணச் சாலை என்று இன்னொரு பெயரும் உண்டு. காரணம் இந்த சாலையில் அடிக்கடி நடைபெறும் விபத்துகள். தினசரி பலர் பலியாவது சகஜமாம்.

குடும்பம் குடும்பமாக விபச்சாரம்

குடும்பம் குடும்பமாக விபச்சாரம்

இந்த சாலையில் 262 இடங்களில் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறதாம். பலர் குடும்பத்தோடு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அந்த அளவுக்கு இங்கு வறுமை வாட்டி வதைக்கிறது. இங்கு ஆட்களைப் பிக்கப் செய்து கொண்டு தங்களது வீடுகளுக்குக் கூட்டிச் செல்வோரும் உண்டு.

கட்டுப்படுத்த முடியாது

கட்டுப்படுத்த முடியாது

அரசுத் தரப்பில் இவர்களின் வறுமையைப் போக்க எந்த வழியும் செய்யாததால் இவர்களையும் விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க முடியாமல், கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. முடிந்தவரை பாலியல் நோய்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளுமாறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மட்டும் அதிக அளவில் இங்கு நடைபெறுகின்றன.

Story first published: Sunday, July 24, 2016, 10:20 [IST]
Other articles published on Jul 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+