Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜப்பான் ஒலிம்பிக் வீரருக்கும் 'போகிமான் கோ' ஜுரம்.. ரோமிங்கில் ஆடியதால் மொபைல் பில் ரூ.3 லட்சம்!

ரியோ டீ ஜெனிரோ: ஒலிம்பிக் மற்றும் உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியனான ஜப்பான் வீரர் கொஹெய் உச்சிமுரா 'போகிமான் கோ' கேம் டவுன்லோடு செய்ததற்காக அவருக்கு மாபெரும் மொபைல் பில் வந்துள்ளதாம்.

ஜப்பான் ஜிம்னாஸ்டிக் வீரர் கொஹெய் உச்சிமுரா (27) ஜிம்னாஸ்டிக்கில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், 2012-ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் தங்கமும் வென்றுள்ளார்.

Rio Olympics: Japanese champion Uchimura hit with Rs 3 lakh bill for downloading Pokemon Go

அவர் 'போகிமான் கோ' விளையாட்டை டவுன்லோடு செய்து விளையாடியதற்காக சுமார் ரூ.300,000 பில் வந்துள்ளதாம் (ஜப்பான் மதிப்பில் சுமார் 500,000 யென்) ரியோ ஒலிம்பிக்கில் விளையாட சென்றுள்ள அவர், ரோமிங்கில் விளையாடியதற்காக இந்த அளவுக்கு அவருக்கு பில் வந்துள்ளதாம்.

இது குறித்து உச்சிமுரா கூறியதாவது: ரியோ ஒலிம்பிக்கு போட்டிகளுக்காக ஸா பாலோவில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டபோது, எல்லோரையும் போல தான் நானும் 'போகிமான் கோ' டவுன்லோடு செய்தேன் என்று கூறினார். தான் ரோமிங்கில் இருப்பதை அறியாத அவர் அப்படியே 'போகிமான் கோ'வுடன் இணைந்து விட்டார் போல. இதனிடையே மொபைல் பில் எகிரியதை பார்த்து அவராலேயே நம்ப முடியவில்லையாம்.

உச்சிமுராவின் சக அணி வீரர் கென்ஷோ ஷிராய் கூறியபோது: உச்சிமுராவிற்கு அன்று அதிகப்படியான பில் வந்தது. இதனால் அன்று அவர் சாப்பிடும் போது மிகவும் வாடிய முகத்துடன் காணப்பட்டார் என்று கூறினார்.

எனினும், உச்சிமுரா பயன்படுத்திய நெட்வொர்க் நிறுவனம் அவருக்கு ஒரு சலுகையை வழங்கிவிட்டது. அதாவது அவர் சுமார் ரூ.200,000 செலுத்தினால் போதும் என கூறிவிட்டதாம். இதன் பின்னரே உச்சிமுரா மகிழ்ச்சியடைந்தாராம்.

Story first published: Wednesday, August 3, 2016, 18:52 [IST]
Other articles published on Aug 3, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+