Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒழுங்கா இருங்க, இல்லாட்டி தூக்கி அடிச்சுருவோம்... இந்திய அமைச்சருக்கு ஒலிம்பிக் கமிட்டி எச்சரிக்கை!

ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் கிராமத்தில் வரம்பு மீறி அடாவடியாக நடந்து கொண்டு பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல். அவரது செயலுக்கு ஒலிம்பிக் கமிட்டி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவரது அனுமதி உத்தரவை ரத்து செய்யப் போவதாகவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பெருத்த அவமானமாகப் போயுள்ளது.

இந்திய அணியினருக்கும் விஜய் கோயல் செயலால் பெரும் தர்மசங்கடமாகியுள்ளதாம். அனுமதி வழங்கப்படாத நபர்களை தன்னுடன் விஜய் கோயல் கூட்டி வருவதே சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் அதைத் தடுக்க முயன்ற காவலர்களுடன் விஜய் கோயல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களைத் தள்ளி விட்டதாகவும் ரியோ ஒலிம்பிக் கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.

விஜய் கோயலின் செயல்பாடு தொடருமானால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகார அனுமதியை ரத்து செய்து விடுவோம் என்றும் கமிட்டி கடுமையாக எச்சரித்துள்ளது.

அடாவடியாக நடக்கிறார்

அடாவடியாக நடக்கிறார்

அதைத் தடுத்தால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். தள்ளி விட்டு விட்டு அடாவடியாக நடந்து கொள்கிறார். இதை ஏற்க முடியாது. வர வர இந்திய அமைச்சரின் செயல்பாடுகள் முரட்டுத்தனமாக இருப்பதாக எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன.

அடாவடியாக நடக்கிறார்

அடாவடியாக நடக்கிறார்

அதைத் தடுத்தால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். தள்ளி விட்டு விட்டு அடாவடியாக நடந்து கொள்கிறார். இதை ஏற்க முடியாது. வர வர இந்திய அமைச்சரின் செயல்பாடுகள் முரட்டுத்தனமாக இருப்பதாக எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன.

அனுமதியை ரத்து செய்து விடுவோம்

அனுமதியை ரத்து செய்து விடுவோம்

இதேபோல இந்திய விளையாட்டு அமைச்சர் செயல்பட்டால் அவருக்கான அனுமதியை ரத்து செய்ய நேரிடும் என்று கடுமையாக எச்சரிக்கிறோம் என்று சாரா கூறியுள்ளார். இந்தியக் குழுத் தலைவர் ராகேஷ் குப்தாவுக்கு இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் சாரா அனுப்பியுள்ளார்.

ரியோவில் முகாம்

ரியோவில் முகாம்

விஜய் கோயல் ரியோவில் முகாமிட்டுள்ளார். இந்திய அணியினரை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுக்கவும் அவர் போயுள்ளார். ஆனால் கூடவே அனுமதி வழங்கப்படாத பலரையும் அவர் கூட்டிச் செல்வதால்தான் சர்ச்சை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, August 12, 2016, 13:03 [IST]
Other articles published on Aug 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+